Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
நீங்க போட்டிருக்கும் பெர்ஃப்யூம் நீண்ட நேரம் இருக்கமாட்டீங்குதா? இதோ சில டிப்ஸ்...
நிறைய பேர் கமகமவென்று இருக்க நினைத்து கடைகளில் விற்கப்படும் பல்வேறு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி வாங்கி பயன்படுத்தும் வாசனை திரவியங்களானது நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை. இதனால் பலர் டென்சனாகி, அளவாக பயன்படுத்த வேண்டிய வாசனை திரவியத்திலேயே குளிக்கின்றனர்.
உடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!!
இப்படி செய்வதால் உடலில் இருந்து நறுமணமானது நீண்ட நேரம் வீசும் தான். ஆனால் அதே சமயம் கடுமையான தலைவலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, உங்கள் அருகில் வருபவர்கள் உங்கள் மீது வீசும் அதிகப்படியான நறுமணத்தினால் அருகில் வராமலேயே சென்று விடுவார்கள். எனவே நீங்கள் பெர்ஃப்யூமில் குளிக்காமல இருக்கவும், அளவாக அடிக்கும் பெர்ஃப்யூம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவும் ஒருசில ட்ரிக்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றுங்கள்.
அக்குள் வாடையைப் போக்கும் சில இயற்கை சிகிச்சைகள்!!!

ஆடை அணியும் முன்பே பெர்ஃப்யூம்
பொதுவாக அனைவரும் குளித்து முடித்து, ஆடை அணிந்து, தலை சீவி விட்டு, இறுதியில் கிளம்பும் போது தான் பெர்ஃப்யூம் போட்டு செல்வோம். ஆனால் உங்கள் பெர்ஃப்யூம் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமானால், ஆடை அணியும் முன்பே பெர்ஃப்யூம் அடியுங்கள். இப்படி ஈரமாக இருக்கும் போதே பெர்ஃப்யூம் அடித்தால், வாசனையானது நீண்ட நேரம் இருக்கும்.

ஈரப்பசையுடன் பெர்ஃப்யூம் அடிக்கவும்
முதலில் பெர்ஃப்யூம் நீண்ட நேரம் இருக்க வேண்டுமானால், சரியான இடத்தில் அந்த வாசனை திரவியத்தை அடிக்க வேண்டும். அதிலும் எப்போதும் லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்படியான இடத்தில் அடிக்க வேண்டும். உதாரணமாக, அக்குள், கழுத்து, கைகளில் மடங்கும் இடம் போன்ற இடங்களில் அடத்தால், வாசனை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது
உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? அப்படியானால் நீங்கள் சந்தோஷப்படலாம். ஏனெனில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பெர்ஃப்யூம் அடித்தால், அவர்களின் உடலில் அந்த வாசனையானது நீண்ட நேரம் நிலைத்து இருக்குமாம். ஒருவேளை உங்களுக்கு உலர்ந்த சருமம் என்றால், மாய்ஸ்சுரைசர் தடவிய பின் பெர்ஃப்யூம் அடித்துக் கொள்ளுங்கள். இதனால் நீண்ட நேரம் பெர்ஃப்யூம் வாசனை இருக்கும்.

தேய்க்க வேண்டாம்
சிலர் பெர்ஃப்யூம் அடித்த பின்னர் தேய்த்துக் கொள்வார்கள். ஆனால் அப்படி தேய்த்துக் கொள்வதால், வாசனை திரவியத்தில் உள்ள மூலக்கூறுகளானது உடைந்து, எளிதில் காற்றில் கரைந்துவிடும். ஆகவே வாசனை திரவியத்தைப் பயன்படுத்திய பின்னர் தேய்க்க வேண்டாம்.

இடைவெளி அவசியம்
பொதுவாக பெர்ஃப்யூம் அடிக்கும் போது 6 இன்ச் இடைவெளி விட்டு அடிக்க வேண்டும் என்று அந்த பாட்டிலிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஆகவே அதன் படி செய்து, மேற்குறிப்பிட்டுள்ளதை மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் நீண்ட நேரம் பெர்ஃப்யூம் வாசனையானது நிலைத்திருக்கும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications
