For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் எரிச்சல் அதிகமாக இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட நேரம் சுற்றினாலும், கண்கள் எரிச்சலுடன் இருக்கும்.

இவ்வாறு கண்கள் எரிச்சல் வந்தால், அது சிறிது நேரத்தில் குணமாகிவிடும் என்று எண்ணக்கூடாது. இல்லாவிட்டால், கண்களில் பெரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும். எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால், அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் ஆரம்பத்திலேயே ஈடுபட்டால், கண்களில் எரிச்சல் ஏற்படுவது குணமாவதோடு, கண்களை அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

சரி, இப்போது கண்களில் ஏற்படும் எரிச்சலை குணமாக்குவதற்கு உள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

கண்கள் எரிச்சலுடன் இருந்தால், அப்போது குளிர்ந்த நீரில் கண்களை அலசினால், கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தூசிகள் நீங்கி, எரிச்சல் குணமாகும். குறிப்பாக, இவ்வாறு செய்யும் போது, கைகளை முதலில் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அழுக்கான கையால் கண்களை எப்போதும் தொடக்கூடாது.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

சிறிது காட்டனை எடுத்து, அதனை ரோஸ் வாட்டரில் நனைத்து, கண்களை மூடி அதன் மேல் வைத்தால், உடனே கண் எரிச்சல் குணமாகும். மேலும் கண்களில் புண் இருந்தால், இந்த முறையை செய்ஹயும் போது, புண்ணால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனை கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். வேண்டுமெனில், உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து கூட உபயோகிக்கலாம். இந்த முறையால் கருவளையம் இருந்தாலும் போய்விடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வட்டமாக வெட்டி, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண் எரிச்சல் குணமாவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருவளையமும் நீங்கும். மேலும் இதில் உள்ள குளிர்ச்சி தன்மையால் கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

டீ பேக்

டீ பேக்

கண் எரிச்சலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்களில் ஒன்று தான் டீ பேக்குகளை கண்களில் வைப்பது. அதாவது, 2 டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், கண் எரிச்சல் நீங்குவதோடு, கண்களும் அழகாக இருக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

ஆம், கற்றாழையின் ஜெல்லும் கண் எரிச்சலைப் போக்கக்கூடிய ஒரு பொருள் தான். அதற்கு கற்றாழையை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை காட்டனில் நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும்.

சீமைச்சாமந்தி பூக்கள்

சீமைச்சாமந்தி பூக்கள்

சீமைச்சாமந்தி பூக்களை உலர வைத்து, பின் அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு, கண்களை கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, கண்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

நல்ல சுத்தமான ஐ ட்ராப்பரை எடுத்துக் கொண்டு, அதில் விளக்கெண்ணெயை எடுத்து, கண்களில் ஒரு துளி விட்டு, கண்களை சிறிது நேரம் மூடினால், கண் எரிச்சல் நீங்கும். மேலும் இந்த முறையை அதிக அளவில் கண் எரிச்சல் உள்ளவர்கள், தினமும் 3-4 முறை செய்து வந்தால், கண்களில் உள்ள எரிச்சல் குறைவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றிக் கலந்து, அந்த கலவையை காட்டனால் நனைத்து, கண்களின் மேல் வைத்தால், கண் எரிச்சல் உடனே குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies To Soothe Burning Eyes

Many of us suffer from burning eyes many times. Whatever the reasons are, if you start treating them in early stages, you can get rid of burning eyes easily. You can try some home remedies which are hassle free and provide immediate relief from sore eyes. Here are the remedies which you can try to get rid of burning eyes.
Story first published: Thursday, September 12, 2013, 12:53 [IST]
Desktop Bottom Promotion