Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!!
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ஒயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும்.
அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ஒயின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்சு மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ஒயினை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ஒயின் உடலுக்கு மட்டும் நன்மைகளை தருவதில்லை. சருமம் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது.
அதனால் தான் அதனைப் பருகுபவர்களின் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கிறது. அதற்காக இதனை பருகினால் தான் அழகைப் பெற முடியும் என்று சொல்லவில்லை. அழகாக வெளிப்படுவதற்கு ரெட் ஒயின் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும் தற்போது ரெட் ஒயின் ஃபேஷியல் என்ற ஒன்றும் பிரபலமாக உள்ளது. பல பெண்களும் அந்த ஒயின் ஃபேஷியலை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஃபேஷியலை பணம் இருப்போர் மேற்கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன?
எனவே தான் தமிழ் போல்ட் ஸ்கை, இத்தகைய ரெட் ஒயினைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சருமத்தையும், கூந்தலையும் அழகாக பராமரிக்கலாம் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து, ரெட் ஒயினை வாங்கி, எளிதாக அழகை மேம்படுத்துங்கள்.

முகப்பரு
முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் ஒயினை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.

முதுமைத் தோற்றம்
ரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்த, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

பொலிவிழந்த சருமம்
பொலிவிழந்த சருமம் நன்கு அழகாக காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயினைக் கொண்டு சருமத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்.

வறட்சியான சருமம்
சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ஒயின் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.

கருமையான சருமம்
சிலரது சருமத்தில் இறந்த செல்களானது அதிகம் இருப்பதால், சருமமானது கருமையாக காணப்படும். அத்தகையவர்கள், ரெட் ஒயினைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது முற்றிலும் வெளியேறி, கருமை நீங்கும்.

வெள்ளையான சருமம்
நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயினை சருமத்திற்கு தடவி வர வேண்டும்.

பழுப்பு நிற சருமம்
தற்போதுள்ள கடுமையான வெயிலால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் மாறுவதோடு, சரும செல்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட, ரெட் ஒயினை யூஸ் பண்ணுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மென்மையான சருமம்
சருமம் வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது, நன்கு மென்மையாக இருந்தால் தான், அழகு என்று சொல்ல முடியும். எனவே அத்தகைய மென்மையை பெற வேண்டுமெனில், ரெட் ஒயினை தினமும் சருமத்திற்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

கூந்தல் வளர்ச்சி
கூந்தல் உதிர்தல் பிரச்சனை இருந்தால், குளிக்கும் போது இறுதியில் ரெட் ஒயின் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் பிரச்சனை குறைந்து, கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

அடர்த்தியான கூந்தல்
ரெட் ஒயினின் மற்றொரு நன்மை என்னவென்றால், ரெட் ஒயினைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.



Click it and Unblock the Notifications