Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
ஹீரோயின் மாதிரி ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க 'இந்த' விஷயங்கள தினமும் ஃபாலோ பண்ணா போதுமாம்!
ஹீரோயின் மாதிரி அழகான ஜொலிக்கும் சருமத்தை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள். பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்பவோம். தங்கள் முகம் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை பலர் செய்துவருகின்றனர்.
ஆரோக்கியமான சருமத்திற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி சுத்திகரிப்பு ஆகும். க்ளென்சர்கள் அதிகப்படியான எண்ணெய், மேக்அப், அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க முகத்தை முதலில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

முகத்தை நீங்கள் சுத்தப்படுத்தும்போது, இறந்த சரும செல்கள் மற்றும் தோலுடன் தொடர்பு கொள்ளும் எந்த மாசுக்களையும் அகற்ற உதவுகிறது. காலையிலும் இரவிலும் ஒருவர் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமத்தை பெற ஒருவர் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்
உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க தண்ணீர் மிகவும் முக்கியம். நல்ல சருமத்தை பராமரிக்க அறை வெப்பநிலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிப்பது உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மையளிக்கிறது. உங்கள் சருமத்தை இயற்கையாக பளபளக்க வைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
ஆரோக்கியமான உணவு உங்களை உள்ளிருந்து ஜொலிக்க வைக்கிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒல்லியான புரதங்களை நிறைய சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உங்கல் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
சன்ஸ்கிரீன்
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆரோக்கியமான சருமத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இது சூரியனின் புறஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. உங்களின் சருமப் பராமரிப்பு வழக்கத்திற்குப் பிறகு மற்றும் மேக்கப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்தப்படலாம். இன்னும் கோடை வெயிலின் தாக்கம் இருப்பதால், ஒவ்வொரு 4 முதல் 5 மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
மன அழுத்தம் பொதுவாக பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உங்கள் சருமத்தை அதிக உணர்திறன் மிக்கதாக ஆக்கும் மற்றும் முகப்பருக்கள் மற்றும் பிற தோல் பிரச்சனைகளை தூண்டும். ஆரோக்கியமான சருமம் மற்றும் ஆரோக்கியமான மனநிலையை ஊக்குவிக்க உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்.
தினமும் போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதி செய்யுங்கள். மன அழுத்தத்தை குறைக்க யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் நீங்கள் ஈடுபடலாம். நீங்கள் இழந்த பொலிவை மீண்டும் பெற இவை உதவும்.
சீரம்
சீரம் உங்கள் சருமத்தை நீரேற்றம் செய்கிறது மற்றும் ஒளிரச் செய்ய உதவுகிறது. ஆனால் சருமத்தின் தேவைக்கேற்ப சீரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சருமத்தை சுத்தப்படுத்திய பின் சீரம் பயன்படுத்தலாம். மென்மையான மற்றும் தெளிவான சருமத்திற்கு நியாசினமைடு கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுங்கள்
மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பது உங்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கலாம். புகைபிடிப்பது சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சுருக்கி, இரத்த ஓட்டத்தை குறைத்து சருமத்தை வெளிறச் செய்கிறது.
மேலும், இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினையும் சேதப்படுத்துகிறது. கூடுதலாக, புகைபிடித்தல் தோல் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கலாம். ஆதலால், இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்களை கைவிடுவது, உங்கள் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது.



Click it and Unblock the Notifications

