Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தர்பூசணியை முகத்துல இப்படி யூஸ் பண்ணா... முகப்பருவே வராதாம்... நல்லா பளபளன்னு முகம் இருக்குமாம்!
பொதுவாக கோடை மாதங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில், உடலை குளிர்விக்க உதவும் கோடைகாலப் பழங்களில் தர்பூசணி முதலிடம் வகிக்கிறது. ஏனெனில், இதில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால், அவை கடுமையான வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
தர்பூசணியை வெட்டி நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் சருமத்தில் ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கவும் முகப்பருவை எதிர்த்துப் போராடவும் நீங்கள் வீட்டு வைத்தியம் தேடுகிறீர்களானால், தர்பூசணியை முயற்சி செய்யுங்கள்.

தர்பூசணி ஏன் சருமத்திற்கு நல்லது என்பதையும், முகப்பருவை எதிர்த்துப் போராட உங்கள் கோடைகால சருமப் பராமரிப்பில் அதை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சருமத்திற்கு தர்பூசணியின் நன்மைகள்
நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணியில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மல்டிவைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மைகளை வழங்குகிறது. தர்பூசணியில், அதிகளவு லைகோபீன் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
கொலாஜன் சேதத்தை குறைத்து, தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது மற்றும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. வைட்டமின் பி5 (பாந்தோதெனிக் அமிலம்), வைட்டமின் ஏ, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமான தர்பூசணி, மந்தமான சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
தர்பூசணி விதைகளில் காணப்படும் மெக்னீசியம் மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் மற்றும் முகப்பருவைப் போக்கவும் உதவுகிறது. தர்பூசணியில் உள்ள மாலிக் அமிலம், இறந்த சரும செல்களை அகற்ற உதவும் எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. எனவே, கறைகள் மற்றும் மந்தமான தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.
முகப்பருவுக்கு தர்பூசணி ஃபேஸ் பேக்
சத்தான இந்த கோடைப் பழம் சருமத்தை ஆற்றவும் அமைதிபடுத்தவும் உதவுகிறது. தர்பூசணி சாற்றை உங்கள் முகத்தில் தடவி, 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது உங்கள் தோல் எரிச்சல் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. மேலும், உடலின் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, காயத்தை குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் முகப்பருவையும் குறைக்கிறது.
தயிர் மற்றும் தேன் கலந்த தர்பூசணி
தர்பூசணி சாறு, தயிர் மற்றும் தேனை ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவில், 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தேன் மற்றும் தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கும், தயிர் சருமத்தை பொலிவாக்க உதவும்.
தர்பூசணி மற்றும் தக்காளி
மசித்த தர்பூசணி மற்றும் தக்காளி கூழ் கலவையை எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இது சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. தர்பூசணியில் உள்ள மாலிக் அமிலம் மற்றும் தக்காளியில் உள்ள லைகோபீன் ஆகியவை இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர்களாக செயல்பட்டு சருமத்தை ஆற்ற உதவுகிறது.
தர்பூசணி மற்றும் வாழைப்பழம்
தர்பூசணி சாறு மற்றும் மசித்த வாழைப்பழத்தின் கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைப் போக்க உதவுவதோடு, சருமத்தை பளபளப்பாக்குகிறது. பழத்தின் மெல்லிய துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்து, அதை எடுத்து முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவலாம். இது நீரேற்றத்தை வழங்குவதோடு, உங்கள் சருமத்தையும் ஆற்றவும் உதவும்.
தர்பூசணியுடன் எலுமிச்சை மற்றும் ஸ்க்ரப்பிங் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், எலுமிச்சையில் லாக்டிக் அமிலமும், தர்பூசணியில் மாலிக் அமிலமும் உள்ளது. இந்த இரண்டு அமில முகவர்களை இணைப்பதன் மூலம் உங்கள் சருமம் வறண்டு, சிவந்து போகலாம். அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு இது மிகவும் மோசமானது.
மேலும், தர்பூசணி ஃபேஸ் பேக்குகளுடன் சர்க்கரை மற்றும் வால்நட்ஸ் போன்ற கடுமையான ஸ்க்ரப்பிங் முகவர்களைக் கலக்கக் கூடாது. எந்தவொரு வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கும் முன்பு, தோல் மருத்துவரை அணுக வேண்டும் அல்லது பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications

