Latest Updates
-
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம்
முகத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் சீரம் வகைகள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
முகப்பராமரிப்பில் ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் சீரம் மிக முக்கியமானது. அவை உங்கள் முகத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தை வழங்குகிறது. அவை உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் சீரம் இரண்டுமே முகப் பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றன.
இவை உங்கள் முகத்திற்கு அதிக பளபளப்பை தரக் கூடியது. இந்த ஃபேஸ் மாஸ்க்குகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஃபேஸ் மாஸ்க்குகளும் ஒவ்வொரு தேவைகளுக்காக பயன்படுகிறது.

அதே மாதிரி சீரத்திலும் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொரு சீரமும் ஒவ்வொரு வேலையை செய்கிறது. எனவே இதில் உங்களுக்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் சீரம் எவை என கண்டறிந்து பயன்படுத்துங்கள்.
ஃபேஸ் மாஸ்க்குகளின் நன்மைகள்
ஃபேஸ் மாஸ்க்குகள் சரும பராமரிப்பில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் நீங்கள் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற முடியும். இது உங்களுக்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை குறைக்க பயன்படுகிறது.
சரும அழகையும் அமைப்பையும் மேம்படுத்த உதவுகிறது. முகப்பருக்கள் மற்றும் சரும கோடுகள் இவற்றை போக்க உதவுகிறது. இவை உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்தை இளமையாகவும், உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்கள் பயன்படுத்தி வந்தால் மிகுந்த நன்மைகளை பெறலாம்.
ஃபேஸ் மாஸ்க் வகைகள்:
ஹைட்ரேட்டிங் ஃபேஸ் மாஸ்க்
முகத்தில் உள்ள ஈரப்பதத்தை சரியாக வைக்கவும், சரும செயல்பாட்டை மீட்டெடுக்கவும், சரும வறட்சியை எதிர்த்து போராடவும் ஹைட்ரேட்டிங் ஃபேஸ் மாஸ்க்குகள் உதவுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ஹைலூரோனிக் அமிலம் மற்றும் கிளிசரின் போன்ற பொருட்கள் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது.
களிமண் ஃபேஸ் மாஸ்க்குகள்
எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் பாதிப்பை நீக்க களிமண் ஃபேஸ் மாஸ்க்குகள் உதவுகிறது. களிமண் ஃபேஸ் மாஸ்க்குகள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச உதவுகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.
சீட் ஃபேஸ் மாஸ்க்குகள்
சீட் ஃபேஸ் மாஸ்க்குகளில் சீரம் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கவும், வைட்டமின் சி அல்லது நியாசினமைடு போன்ற பொருட்கள் இந்த சீட் ஃபேஸ் மாஸ்க்குகளில் உள்ளன. இந்த மாஸ்க்கை பயன்படுத்தி சருமத்தின் நிறத்தை பிரகாசமாக வைக்க முடியும்.
எக்ஸ்ஃபோலியேட்டிங் ஃபேஸ் மாஸ்க்குகள்
இந்த ஃபேஸ் மாஸ்க்குகளில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHAs) அல்லது பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள் (BHAs) போன்ற எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜெண்டுகள் உள்ளன. இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.
சருமத்திற்கான சீரம்களின் நன்மைகள்
சீரம்கள் லேசாக இருப்பதால் தோலில் எளிதாக ஊடுருவி சக்தி வாய்ந்த நன்மைகளை தருகிறது. சீரம் சருமத்தின் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. சரும துளைகளை குறைக்க உதவுகிறது. இது சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்க உதவுகிறது. இது சரும நிறத்தை சீராக்க உதவுகிறது. இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி கண்களில் உள்ள கருவளையங்களை குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி உள்ள சீரம்கள் உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து காப்பாற்ற உதவும். சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
சீரம்களின் வகைகள்
ஆன்டி ஆக்ஸிடன் சீரம்கள்
வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற பொருட்கள் சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து காக்க உதவுகிறது. ப்ரீ ரேடிக்கலை சரியாக்கி சருமத்தின் இளமைத் தோற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
ஹைலூரோனிக் அமில சீரம்கள்
இந்த ஹைலூரோனிக் அமில சீரம்கள் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இந்த சீரம்கள் ஈரப்பதத்தை காக்க உதவுகிறது.இதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும்.
ரெட்டினோல் சீரம்
சருமத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்கள் மற்றும் சீரற்ற சரும பிரச்சனைகளை போக்க சரும மருத்துவர்கள் ரெட்டினோல் சீரத்தை பரிந்துரைக்கின்றன. இது சரும எரிச்சலை தடுக்கவும் உதவுகிறது.
நியாசினமைடு சீரம்
நியாசினமைடு சீரம் சரும துளைகளை குறைக்கவும், சரும தோற்றத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த சரும அமைப்பை மேம்படுத்தவும், பல்வேறு சரும வகைகளுக்கு ஏற்ற ஒன்றாகவும் உள்ளது.
தினமும் ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் சீரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு சீரம் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications

