Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
சருமம் என்றும் இளமையா இருக்கணுமா? அப்ப ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யுங்க..
Oxygen Facial Benefits In Tamil: ஆக்ஸிஜன் ஃபேஷியல் என்பது உங்கள் சருமத்திற்கு என்றும் இளமையை தரக் கூடிய ஒன்றாகும். உங்கள் சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இந்த ஃபேஷியல் உங்களுக்கு உதவுகிறது. இது உங்கள் முகத்திற்கு சிறந்த பிரகாசத்தை கொடுக்கும். உங்கள் சருமத்தில் உள்ள வயதான அறிகுறிகளை குறைக்க இது உதவுகிறது.
இது சரும கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமத்தை என்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் மூலம் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உடனடியாக பெற முடியும். முகப்பருக்கள், இறந்த சரும செல்கள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது.

ஆக்ஸிஜன் ஃபேஷியல் என்றால் என்ன?
இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் என்பது உங்கள் சரும செல்களை வளர்க்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த பேஷியலின் போது அதிக ஆக்ஸிஜன் செறிவூட்டப்பட்ட இயந்திரத்தை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வார்கள்.
இந்த பேஷியலை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் செய்வது உண்டு. முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜனில் வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாவரவியல் சாறுகள் போன்றவை அடங்கி உள்ளன. பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பொலிவாக்க இந்த ஆக்ஸிஜன் பேஷியலை செய்கின்றனர்.
ஆக்ஸிஜன் ஃபேஷியல் என்ன நன்மைகள் கிடைக்கும்?
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது
கொலாஜன் என்பது ஒரு வகை புரதமாகும். இது செல்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்திற்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் தருகிறது. உங்கள் சருமம் கொலாஜனை இழக்கும் போது வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இதனால் சரும சுருக்கங்கள் முதல் சருமத் தொய்வு வரை ஏற்படுகிறது. இதில் ஆக்ஸிஜன் பேஷியலை நீங்கள் செய்யும் போது உங்கள் சருமத்திற்கு கொலாஜன் பூஸ்ட் கிடைக்கிறது. இது உங்கள் சருமத்தை மேலும் உறுதியாக வைக்க உதவுகிறது. சருக்கங்களையும் சரும கோடுகளை நீக்கவும் உதவுகிறது.
சருமத்தில் உள்ள நச்சுக்களை நீங்குகிறது
ஆக்ஸிஜன் ஃபேஷியல் என்பது சருமத்திற்கு தேவையான போஷாக்குகளை மீண்டும் பெற உதவுகிறது. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகிறது. இதில் ஹைலூரோனிக் அமிலம் என்ற சீரம் உள்ளது. இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சருமத்தின் செயல்முறையை அதிகரிக்கிறது. தோல் செல்களை மறுபடியும் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.
செல்கள் மறுபடியும் புத்துயிர் பெற உதவுகிறது
நமது சரும செல்கள் குறைந்த ஆயுட்காலம் உடையவை. எனவே சரும செல்கள் பாதிப்படையும் போது அவற்றை மீளுருவாக்கம் செய்வது அவசியம். இந்த பாதிப்படைந்த சரும செல்களை மீளுருவாக்கம் செய்ய ஆக்ஸிஜன் மிகவும் அவசியம். இது புதிய செல்கள் வளரும் விகிதத்தை அதிகரிக்கிறது. வடு மற்றும் முகப்பருக்கள் இவற்றால் பாதிப்படைந்த சரும செல்களை மீண்டும் குணப்படுத்த உதவுகிறது. ஆக்ஸிஜன் ஃபேஷியல் உங்கள் சரும செல்களுக்கு கூடுதல் ஆக்ஸிஜன் பூஸ்டரை தருகிறது.
வலி தரக்கூடிய பக்க விளைவுகள் எதுவும் கிடையாது
இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் உங்களுக்கு எந்த விதத்திலும் பக்க விளைவுகளை கொடுக்காது. எரித்தல், சிவத்தல், வீக்கம் போன்ற எந்த பக்க விளைவுகளையும் தராது. எனவே சென்ஸ்டிவ் சருமம் இருப்பவர்கள் கூட இந்த ஆக்ஸிஜன் பேஷியலை தாராளமாக செய்யலாம்.
சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது
உங்கள் சருமத்தை என்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் மூலம் மீண்டும் புத்துயிர் சருமத்தை பெற முடியும். ஆக்சிஜன் ஃபேஷியலில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் உங்கள் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. உங்கள் சருமத்தின் pH சமநிலையை சரியான நிலையில் வைக்க உதவுகிறது. சூரிய ஒளிப் பாதிப்பில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.
சூப்பர் பிரகாசமான சருமம்
இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் உங்கள் சருமத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சூப்பர் பிரகாசமாக வைக்க உதவுகிறது. சருமத்தின் ஆக்ஸிஜன் உள்ளடக்கங்களை அதிகரிக்கிறது. ஹைலூரோனிக் சீரமானது இறந்த செல்களை மேல் அடுக்கில் இருந்து அகற்றி, அடைபட்ட துளைகளைத் திறந்து சருமம் பொலிவுடன் இருக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் கன்னங்களில் இயற்கையான ப்ளஷ் ஜொலி ஜொலிப்பை நீங்கள் பெறலாம்
முகப்பருக்களை குணப்படுத்துகிறது
சரும செல்கள் அழுக்கு, தூசிகள் மற்றும் எண்ணெய் பிசுக்கு இவற்றால் அடைபடுவதால் முகப்பருக்கள் உண்டாகிறது ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யும் போது அதிலுள்ள ஹைலூரோனிக் அமிலம் சரும துளைகள் சுருங்கி சரும துளைகளில் தூசிகள் மற்றும் அழுக்குகள் படிவதை தடுக்கிறது. இதனால் முகப்பருக்களை விரட்ட உதவுகிறது.
உடனே பலன்களை பெற முடியும்
மற்ற பேஷியலை நீங்கள் செய்யும் போது உடனடியாக உங்களுக்கு பலன்கள் கிடைக்காது. இதுவே நீங்கள் ஆக்ஸிஜன் பேஷியலை செய்யும் போது உடனடி பலன்களை உங்கள் சருமத்தில் நீங்கள் காணலாம். பிறகு வழக்கமாக பயன்படுத்தும் க்ரீம்கள், லோஷன்கள் மற்றும் ஒப்பனைகள் போன்றவற்றை நீங்கள் எளிதாக பயன்படுத்தலாம். இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் உங்கள் முகப்பருக்கள், கொப்புளங்கள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்றவற்றை சரி செய்து சருமம் பொலிவுடன் திகழ உதவுகிறது.



Click it and Unblock the Notifications











