இன்று 50-வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? இதோ!

Happy Birthday Aishwarya Rai Bachchan: உலக அழகி என்றதுமே நம் அனைவரது நினைவிற்கும் முதலில் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராயாகத் தான் இருக்கும். என்ன தான் இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றிருந்தாலும், இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இப்படிப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்பது தெரியுமா?

50 வயதாகியும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்னும் தனது அழகை சிறப்பாக பராமரித்து வருகிறார் என்றால், நிச்சயம் அவரது அழகின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள பல பெண்களும் விரும்புவார்கள். பொதுவாக 30, 40 வயதை எட்டியதுமே பெண்களின் முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்துவிடும்.

Aishwarya Rai Bachchans Beauty Secrets In Tamil

ஆனால் 50 வயதாகியும், ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகு குறையாமல் இருக்கிறது என்றால், அதற்கு அவர் சருமத்திற்கு கொடுக்கும் ஒருசில பராமரிப்புகள் தான். முக்கியமாக இவர் இயற்கை பொருட்களைக் கொண்டு தான் தனது சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து வருவராம். இப்போது 50 வயதிலும் அழகாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகு ரகசியத்தைக் காண்போம்.

தண்ணீர் அதிகம் குடிப்பாராம்

ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகான சருமத்திற்கு முக்கிய காரணம், இவர் அதிகமாக தண்ணீர் குடிப்பாராம். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம், சருமம் போதுமான ஈரப்பதத்துடன் இருக்கும். சருமத்தில் ஈரப்பதம் போதுமான அளவில் இருந்தாலே சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும் என்று பிரபலமான வோக் இதழுக்கு தனது அழகு ரகசியத்தைப் பற்றி கூறியுள்ளார்.

ஆரோக்கியமான உணவுகள்

இது தவிர ஐஸ்வர்யா ராய் ஜங்க் உணவுகள், வறுத்த உணவுகள், ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்ற எதையும் தொடமட்டாராம். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவாராம். பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே உட்கொள்வாராம். இதுவும் இவரது அழகிற்கு ஒருவித காரணமாக கூறியுள்ளார்.

நேச்சுரல் ஃபேஸ் பேக்

முக்கியமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது சருமத்திற்கு இயற்கை பொருட்களைக் கொண்டு தான் பராமரிப்புக்களைக் கொடுப்பாராம். அதுவும் இவர் கடலை மாவு, மில்க் க்ரீம், மஞ்சள், தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக், வாழைப்பழ ஃபேஸ் பேக், பாதாம் ஃபேஸ் பேக் ஆகிய மூன்று ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்துவாராம். இப்போது இந்த ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

ஃபேஸ் பேக் #1

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது மில்க் க்ரீம் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஃபேஸ் பேக் #2

* நன்கு கனிந்த வாழைப்பழத்தை பாதி எடுத்து மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் முதலில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் ஒருமுறை முகத்தைக் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #3

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் பவுடரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊறு வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், முகம் நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

நீங்களும் உங்கள் சரும அழகை மற்றும் இளமையை நீட்டிக்க விரும்பினால், இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துங்கள்.

Story first published: Wednesday, November 1, 2023, 10:09 [IST]
Desktop Bottom Promotion