எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது?

Posted By: Staff
Subscribe to Boldsky

சுத்தம் சுகம் தரும் என்று சொல்வார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அப்படி தூய்மையாக வைப்பது ஒன்னும் எளிதான காரியம் இல்லை. உங்கள் வீட்டின் அறையின் சுத்தம் தான் உங்கள் வீட்டின் அழகை பிரதிபலிக்கும்.

வீட்டினுள் தூசி மற்றும் மாசுக்கள் சேராத வண்ணம் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது வீட்டின் அறைகள் மட்டுமல்லாமல் வீட்டின் சுவர்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

எனவே தான் உங்களுக்காக எளிதான முறையில் வீட்டின் அறைகளை சுத்தப்படுத்த சில டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கையை மடித்து விடுங்கள்

படுக்கையை மடித்து விடுங்கள்

இந்த செயலை செய்ய எல்லாருமே சோம்பேறித்தனம் படுவோம். பிறகு வீட்டையெல்லாம் சுத்தம் செய்து விட்டு படுக்கையை மடித்து வைக்கலாம் என நினைப்பது முடியாத காரியம். எனவே முடிந்த வரை எழுந்திருக்கும் போதே படுக்கையை மடித்து தூய்மைப்படுத்தி விடுங்கள்.

எடுத்த இடத்தில் வையுங்கள்

எடுத்த இடத்தில் வையுங்கள்

நீங்கள் கொஞ்சம் கவனித்து பார்த்தால் தெரியும் நாம் எப்பொழுதும் எடுக்கிற பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை. ஆமாங்க இப்படி செய்யும் போது பொருள்கள் எல்லாம் அங்கங்கே என்று சிதறிக் காணப்படும். இதனால் அந்த அறையின் அழகே மாறி விடும். எனவே முதலில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வையுங்கள். இதனால் அறையும் சுத்தமாகும் உங்களுக்கு சுத்தம் செய்வதும் எளிதாகும்.

பொருட்களை அமைப்பாக்குதல்

பொருட்களை அமைப்பாக்குதல்

தற்போது எல்லா பொருட்களை அடுக்கி வைக்கவும் அழகாக்கவும் நிறைய ஸ்டோரேஜ் பெட்டிகள், கூடைகள் போன்ற பல அமைப்புகள் கிடைக்கின்றன. உங்கள் அழுக்கு துணிகள், குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் புத்தகங்கள் இப்படி எல்லாவற்றையும் அழகாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் அறையும் சுத்தமாக தெரியும்.

படுக்கைக்கு அடியில் சுத்தப்படுத்துதல்

படுக்கைக்கு அடியில் சுத்தப்படுத்துதல்

நீங்கள் படுக்கைக்கு மேல் மட்டும் சுத்தம் செய்தால் போதாது. படுக்கைக்கு அடியில் தான் எல்லா தூசிகளும் சேர்ந்து போய் இருக்கும். எனவே படுக்கையை எடுத்து நன்றாக உதரி விட்டு அடியில் வேக்யூம் க்ளீனர் அல்லது துடைப்பம் கொண்டு மூலை முடுக்குகளிலும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நாம் அடிக்கடி நோய்வாய்ப்படுதலை தவிர்க்கலாம்.

ஒரே இடத்தில் வையுங்கள் :

ஒரே இடத்தில் வையுங்கள் :

உங்களுக்கு தேவையான சுத்தப்படுத்திகளை ஒரே இடத்தில் வையுங்கள். அப்பொழுது தான் தேவைப்படும் போது எடுப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலும் உங்கள் அறையும் சுத்தமாக இருக்கும். க்ளீனிங் ஏஜெண்ட், துடைப்பம் மற்றும் குப்பை தொட்டி போன்றவற்றை ஓரே இடத்தில் செளகரியமாக வைத்து கொள்ளுங்கள்.

அழுகிய பொருட்களை தூக்கி போடுங்கள் :

அழுகிய பொருட்களை தூக்கி போடுங்கள் :

பால், பழங்கள் போன்ற பொருட்கள் கெட்டு போய் விட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இந்த துர்நாற்றம் உங்கள் சமையல் அறையையே மாசாக்கி விடும். மேலும் இது போன்ற பொருட்களிலிருந்து கிருமிகள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே உடனே உடனே இந்த மாதிரியான கெட்டுப் போன பொருட்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.

சுத்தப்படுத்த கையுறைகளை பயன்படுத்துங்கள் இரண்டு ஜிம் சாக்ஸ்களை எடுத்து கொண்டு அதில் ஒரு கையுறையை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். மற்றொன்றை ட்ரையாக வைத்து கொள்ளுங்கள். வறண்ட பகுதிகளுக்கு ட்ரையான கையுறையையும், அழுக்கு எண்ணெய் பிசுக்கு படிந்த பகுதிகளுக்கு நனைந்த ஈரமான கையுறையையும் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்துங்கள். இந்த முறை உங்களுக்கு சுத்தப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்தும்.

ஜன்னல்களை திறந்து விடுங்கள்

ஜன்னல்களை திறந்து விடுங்கள்

நீங்கள் வெளியில் பணிபுரிபவராக இருந்தால் கண்டிப்பாக வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து இருக்க மாட்டீர்கள். வார விடுமுறை நாட்களிலாவது கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வையுங்கள். இது உங்கள் வீட்டினுள் சுத்தமான காற்றை பரவச் செய்யும். மேலும் எந்த வித துர்நாற்றமும் இல்லாமல் இருக்கவும் உதவும்.

படுக்கை விரிப்பு

படுக்கை விரிப்பு

நீங்கள் எழுந்திருக்கும் போது படுக்கை விரிப்பை அந்த இடத்திலேயே அப்படியே வைத்து விடாதீர்கள். இதனால் அதில் தூசிகள் படிய வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி படுக்கை விரிப்பை உதரி சுருட்டி வையுங்கள்.

தரையை சுத்தம் செய்யுங்கள்

தரையை சுத்தம் செய்யுங்கள்

எல்லாரும் அறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தரையில் கிருமிகள் அப்படியே இருக்கும். எனவே தரையை தண்ணீர் அல்லது க்ளீனிங் ஏஜெண்ட் கொண்டு துடைக்க வேண்டும்.

கண்ணாடியை துடைக்க மறந்துவிடாதீர்கள்

கண்ணாடியை துடைக்க மறந்துவிடாதீர்கள்

கண்ணாடி உங்கள் பிம்பத்தை மட்டும் பிரதிபலிப்பதில்லை. உங்கள் வீட்டின் அழகையும் சேர்த்து தான் பிரதிபலிக்கும். எனவே அப்படிப்பட்ட கண்ணாடியை சுத்தப்படுத்த சோம்பேறித்தனம் படாதீர்கள். எனவே வாரத்திற்கு ஒரு முறை என்ற விதத்தில் கண்ணாடியையும் அடிக்கடி சுத்தம் செய்து விடுங்கள். இதனால் உங்கள் வீடும் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

அலமாரிகளை சுத்தப்படுத்துங்கள்

அலமாரிகளை சுத்தப்படுத்துங்கள்

மூடிய அலமாரிகளில் எந்த வித தூசிகளும் படியாது என்று நினைப்பீர்கள். ஆனால் நிறைய தூசிகள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் படிந்திருக்கும். எனவே எல்லா பொருட்களையும் அலமாரியில் இருந்து எடுத்து விட்டு அலமாரியை அடிக்கடி நன்றாக சுத்தம் செய்து விடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Cleaning Tricks For Rooms

Simple Cleaning Tricks For Rooms
Story first published: Saturday, January 20, 2018, 9:00 [IST]