Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
புத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?...
உடலில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு. ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமான கூறுகளை குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான தனிமங்களை அதிகரிக்கவும் முத்ரா பிருத்வி அவ
புத்தரின் கையை நன்கு உற்று கவனித்தீர்கள் என்று சொன்னால் ஒரு முத்திரைக் குறியீடு இருக்கும். அது ஏதோ அவர் கையை மற்ற தெய்வங்க்ள வைத்திருப்பது வைத்திருக்கிறார் என்று நாம் சாதாரணமாகக் கடந்து விடுவோம்.

பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.

புத்தர்
புத்தரின் கையை நன்கு உற்று கவனித்தீர்கள் என்று சொன்னால் ஒரு முத்திரைக் குறியீடு இருக்கும். அது ஏதோ அவர் கையை மற்ற தெய்வங்க்ள வைத்திருப்பது வைத்திருக்கிறார் என்று நாம் சாதாரணமாகக் கடந்து விடுவோம். ஆனால், அந்த முத்திரைக்கு பெயர் ப்ருத்வி முத்திரை. அந்த முத்திரைக்குள் இருக்கிற ரகசியமும் அதை எப்படி செய்ய வேண்டும்?, அதனால் என்னென்ன பயன்பாடுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் என்று தெரிந்தால், உடனே நீங்களும் தினமும் இந்த முத்திரையை செய்ய ஆரம்பிச்சிடுவீங்க.

பிரித்வி முத்ரா செய்முறைகள் - பயன்கள்
உடலில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு. ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமான கூறுகளை குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான தனிமங்களை அதிகரிக்கவும் முத்ரா பிருத்வி அவசியமாகிறது. உடல் எடைக்கும், முடி வளர்ச்சிக்குமான சூத்திரம் இதில் மறைந்துள்ளது.

பிருத்வி முத்ராவை எப்படிச் செய்ய வேண்டும்?
பெருவிரலை மடக்கி மோதிர விரலை அதன்மீது அழுத்திப் பதிய வைக்க வேண்டும். இதுதான் பிருத்வி முத்ரா.
தரையில் அமர்ந்து கொண்டு, முதுகை வளைக்காமல் முதலில் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு, பெருவிரலை மடக்கி, அதை மோதிர விரலின் மேலே வைத்து அமுக்கி, பிடித்திருக்க வேண்டும்.

முடி வளர
என்னடா இது?... இந்த முத்திரை முடியைக்கூட வளர வைக்குமா என்று ஆச்சர்யமாகக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ப்ருத்வி முத்திரை முடியின் வளர்ச்சி உடலில் உள்ள எர்த் எலிமன்ட்சுடன் தொடர்புடையது. மோதிர விரலும், கட்டை விரலும் அழுத்தம் பெறும்போது செல்களின் இயக்கம் தூண்டப்படுகிறது. இதனால் முடி வளர்கிறது. இந்த முத்திரையின் மூலம் உடலில் நேர்மறை ஆற்றல் உடல் முழுவதும் பரவி, உடல் முழுக்க நேர்மறை ஆற்றலை பரவச் செய்யும்.

உடல் எடை கூடும்
உடம்பில் உள்ள எர்த் எலிமன்ட்ஸ் பிரித்வி முத்ராவால் உந்தப்படுகிறது, இது உடல் எடையை அதிகரிக்கிறது. சிலர் என்னதான் சாப்பிட்டாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். எடை கொஞ்சமாகக் கூடிவிடாதா? என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அதற்காக கண்டதையும் சாப்பிட்டு பார்ப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், தினமும் இந்த ப்ருதிவி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடை கூட ஆரம்பிக்கும்.

மற்ற பயன்கள்
• பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.
• எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.
•அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது
• மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது
• நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது
• தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்
• சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்
பிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்ததால் தான் புத்தரால் இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய மனதையும் அமைதிப்படுத்தும் கருவியாக மாற முடிந்தது. அவரையும் அது நல்வழிப்படுத்தியது.



Click it and Unblock the Notifications
