For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் போகாமல் அசிங்கமா இருக்கா? அப்ப இதை ட்ரை பண்ணுங்க.!!

முகப்பருக்களின் தழும்புகளை நிரந்தரமாக நீக்கச் செய்யும் அருமையான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. குறிப்புகளை படித்து பயன்பெறுங்கள்.

By Divyalakshmi Soundarrajan
|

சுற்றுசூழல் மாசு காரணமாக இந்த காலத்தில் எல்லா வயதினரும் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருப் பிரச்சனை. முகப்பரு ஏற்பட முக்கியக் காரணம் முகத்தில் சேரும் அதிகப்படியான அழுக்கு, இறந்த சரும இரத்த செல்கள் போன்றவை. முகப்பரு உருவாக இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. முகத்தில் உள்ள முடிகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என்பதற்காக பலர் மேற்கொள்ளும் அழகு நிலைய சிகிச்சைகள் முற்றிலும் சரியல்ல. அவ்வாறு முடிகளை நீக்குவதாலும் கூட முகத்தில் பருக்கள் ஏற்படும்.

Easy Home Remedies That Can Help To Heal Zit Scars

நமது சருமத்தில் முடிகள் இருப்பதற்கு முக்கியக் காரணம் நமது சருமத்தின் பாதுகாப்பதற்காக தான். அந்த முடிகளை நாம் நீக்கிவிட்டால் நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்ளவதாகும். எனவே, அவற்றை நீக்கியப் பின்பு ஏற்படும் விளைவுகளையும் நாம் எதிர் கொள்ளதானே வேண்டும். அவற்றில் ஒன்று தான் முகப்பருவும் அதனால் ஏற்படுகின்ற தழும்புகளும்.

இவ்வாறு முகத்தில் ஏற்பட்ட பருக்களின் தழும்புகளைப் போக்க நிறைய கிரீம்களை உபயோகித்து பார்த்து அலுத்துப் போய்விட்டதா? ஆனால் மிக எளிமையான முறைகளில் அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்யலாம் என்பது சற்று ஆச்சரிமாகத் தான் இருக்கும். அவற்றைப் பற்றி தான் நாம் இப்போது இங்கே பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சைச் சாறு மற்றும் பேக்கிங் சோடா

எலுமிச்சைச் சாறு மற்றும் பேக்கிங் சோடா

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து தழும்புகள் மீது தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து முகத்தில் தடவி கை விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் முகத்தில் முழுமையாக இழுத்துக் கொள்ளும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் சருமத்திற்குத் தேயைன அனைத்து வைட்டமின்களும் உள்ளன. இவை சருமத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை மறைத்து சருமத்திற்குப் பொழிவைத் தருகின்றன.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். கற்றாழையில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பு உள்ளது. எனவே, இது முகப்பருக்களை எளிதில் போக்கி விடும்.

 உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு ஒன்றை எடுத்து சிறு சிறு துண்டகளாக வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த நறுக்கியத் துண்டுகளை சிறிது நேரம் முகத்தில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். உருளைக் கிழங்கில் வைட்டமின்களும், புரதச் சத்துக்களும் அதிகமாக உள்ளது. இது முகப்பருவினால் ஏற்பட்ட தழும்பிகளை எளிதில் நீக்கி விடும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தை இரவு தூங்கப் போகும் முன்பு நீரில் ஊற வைத்து விட்டு தூங்குங்கள், காலையில் எழுந்ததும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து முகத்திற்கு போட வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.

வெந்தயமானது முகத்தில் உள்ள பருக்களை மட்டுமல்ல அதன் தழும்புகளையும் நீக்கி விடும்.

க்ளிசரின்

க்ளிசரின்

ஒரு டீஸ்பூன் க்ளிசரின் உடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்திற்கு தடவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்குவதோடு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சியான காய். இது சருமத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அரைத்து பேஸ்ட் ஆக செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து முகத்திற்கு போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவு மற்றும் தயிர்

2 டீஸ்பூன் கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தழும்பு உள்ள பகுதியில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். தினமும் 2 முறை இதை செய்து வர வேண்டும். இது முகத்தில் உள்ள தழும்பை நீக்கி நல்ல ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமத்தைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Home Remedies That Can Help To Heal Zit Scars

Easy Home Remedies That Can Help To Heal Zit Scars
Story first published: Wednesday, April 26, 2017, 11:24 [IST]
Desktop Bottom Promotion