குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

By: Arunkumar P.M
Subscribe to Boldsky

குளிர்ந்த காற்றும் வறட்சியான சூழலும் உங்கள் உதடு மற்றும் தோலின் தன்மையை அதிக அளவில் பாதிக்கும். குளிர் மிகுதியாக உள்ள காலத்தில் நம்முடைய உதடுகள் வறட்சியையும் வெடிப்புகளையும் கொண்டு காணப்படுகிறது.

நாம் எப்பொழுதும் குளிர்காலத்தில் உதடுகளை சரியாக பராமரிப்பதில்லை. பொதுவாகவே உதடுகள் ஒரு மென்மையான தோல்களினால் ஆன பகுதியாகும். எனவே அந்த தோல் குளிர்காலத்தில் எளிதாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

பொதுவாக உதடுகளை உள்ளடக்கிய தோல் பகுதி உடலின் மற்ற தோல் பகுதிகளை விட பத்து மடங்கு வறட்சியை கொண்டு காணப்படும்.

how to protect lips in winters

எனவே குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் உதடு வெடிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1 . உதடுகளுக்கு ஸ்க்ரப் :

1 . உதடுகளுக்கு ஸ்க்ரப் :

உங்கள் உதடுகளை வாரத்திற்கு ஒருமுறையாவது அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெடிப்பை ஏற்படுத்துகிற இறந்த செல்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

தோல் பரப்பினை நன்கு தளர்வாக வைப்பதன் மூலம் அதனை அழகாகவும் புத்துணர்வு உடனும் வைத்துக்கொள்ள முடியும்.

சிறிது சக்கரையும் தேனும் கலந்து உதடுகளில் தேய்ப்பதன் மூலம் இயற்கையான இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற முடியும்.

2 . புகை பிடித்தலை தவிர்த்தல் :

2 . புகை பிடித்தலை தவிர்த்தல் :

நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் வறட்சியான சீரற்ற உதட்டு தோல்களை தவிர்க்க முடியும். புகைபிடிப்பது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிப்படைய செய்யும்.

புகை பிடித்தால் கருமையான நிறம் மற்றும் வறட்சியான தன்மையை உதடுகளுக்கு அது கொடுக்கும். தொடர்ச்சியாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உதட்டு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே எந்த காலத்திலும் புகை பிடிக்கும் பழக்கத்தை நாம் தொடர கூடாது.

3 . உதட்டுக்கு இரவில் தேன் உபயோகித்தல்:

3 . உதட்டுக்கு இரவில் தேன் உபயோகித்தல்:

குளிர்ச்சியான காலத்தின் இரவு நேரங்களில் உதடு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தேன் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அது தோலின் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடுகளுக்கு நீர்ச்சத்தினை கொடுக்கிறது. தேனில் இயற்கையான ஈரம் கவரும் தன்மை உள்ளதனால் உதடுகளுக்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது.

4 . உதடுகளை கடிக்காதீர்கள் :

4 . உதடுகளை கடிக்காதீர்கள் :

குளிர்காலத்தில் உங்கள் உதடுகளை கடித்தால் உலர்ந்த தோலின் தன்மையை அது பாதிக்கும். வெடிப்பைகளினால் உதட்டிலிருந்து ரத்தம் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

அவ்வாறான சமயத்தில் எச்சையை கொண்டு உதடுகளை தேய்க்க கூடாது. இதன் மூலம் உதடுகளின் வறட்சியை தவிர்க்க முடியும். உதட்டு தைலத்தை சரியான கால அவகாசத்தில் உபயோகிப்பதன் மூலம் நல்ல உதட்டு தன்மையை பெற முடியும்.

5 . கற்பூரம் சார்ந்த தைலங்களை தவிர்த்தல் :

5 . கற்பூரம் சார்ந்த தைலங்களை தவிர்த்தல் :

உதட்டு தைலங்களை உபயோகிப்பதன் மூலம் வறட்சி மற்றும் வெடிப்புடன் கூடிய உதடுகளை பாதுகாக்க முடியும்.ஆனால் கற்பூரம்,நீலகற்பூரம் மற்றும் பச்சைக்கற்பூரம் கொண்ட தைலங்களை தவிர்க்க வேண்டும்.

இவை உதடுகளின் வறட்சி தன்மையை அதிகரிக்கும். நீங்கள் உபயோகிக்கும் தைலத்தில் வைட்டமின் ஈ அதிகம் இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் ,கற்றாழை களிம்பு போன்ற இயற்கை கலவை உதடுகளுக்கு பயன் அளிக்கும்.

6 . வறண்ட உதடுகளுக்கு இயற்கை வழிகள் :

6 . வறண்ட உதடுகளுக்கு இயற்கை வழிகள் :

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாக்க இயற்கை வழிகளை உபயோகிக்க வேண்டும்.அது உதட்டின் வறட்சியை தவிர்த்து மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது.

லெமன் சாறு, தேன், நெய் மற்றும் வெள்ளரிக்காய் உபயோகிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணலாம்.

சர்க்கரையை தேய்த்தல்,கிளிசரின் - தேன் கலவை மற்றும் பன்னீர் -தேன் கலவை போன்றவற்றை குளிர்காலத்தில் உபயோகித்து உதடுகளை நல்ல முறையில் பாதுகாக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to protect lips in winter

Beauty tips to protect lips during Winter
Subscribe Newsletter