Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க ஆபத்தான காதலராக இருப்பார்களாம்... இவங்க காதலிக்க தகுதியே இல்லாதவர்களாம்...உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். காதல் வாழ்க்கை என்பது நபருக்கு நபர் மாறுபடும், ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்துவமான வழிகளில் காதலிப்பார்கள். அதன்படி சில ராசிக்காரர்கள் காதலில் மோசமானவராக இருக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் கட்டுப்படுத்துதல், கையாளுதல் அல்லது தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் இருத்தல் போன்ற மோசமான நடத்தைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள், இது அவர்களின் துணையை காயப்படுத்தலாம்.

இந்த பண்புகளை அறிந்துகொள்வது மக்கள் தங்கள் உறவுகளை சிறப்பாக கையாளவும், நச்சு உறவிலிருந்து விலகி இருக்கவும் உதவும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாதவர்களாக அறியப்படுகிறார்கள், இது அவர்களின் துணையை எப்போதும் கவலையாக உணர வைக்கும். அவர்கள் விசுவாசமின்றி இருக்கலாம் அல்லது உறவில் உறுதியுடன் இருப்பதைத் தவிர்க்கலாம், இதனால் உறவில் நம்பிக்கை பிரச்சினைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட உணர்வுகள் ஏற்படும். தொடர்ந்து மாறிவரும் அவர்களின் மனநிலைகள் உறவுகளில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கலாம், இதனால் அவர்கள் துணையின் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். இது அவர்களை நச்சுத்தன்மை வாய்ந்த காதலராக மாற்றுகிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், மனக்கிளர்ச்சியுடனும், சிந்திக்காமல் செயல்படும் தன்மையுடனும் இருப்பதால், அவர்கள் பொறுப்பற்ற காதலராக அறியப்படுகிறார்கள், இது அவர்களின் துணையை உணர்ச்சிரீதியாக காயப்படுத்தும். அவர்களின் போட்டியுணர்வு உறவில் மன அழுத்தம் மற்றும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும், இதனால் அவர்கள் முடிவில்லாத மோதலில் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தை அவர்களின் துணைக்கு அளிக்கலாம்.
மேஷ ராசிக்காரர்களின் பச்சாதாபம் இல்லாத ஆளுமை, தங்கள் சொந்த தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கும் தன்மை ஆகியவகற்றல் அவர்களின் துணைக்கு புறக்கணிப்பு மற்றும் எரிச்சல் உணர்வுகள் ஏற்படலாம். இது அவர்களை மோசமான காதலர்களாக மாற்றுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த பாதுகாப்பின்மை காரணமாகவே, மிகவும் பொஸசிவாகவும், கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்களாகவும் இருக்கலாம். தங்கள் துணையை கையாளும் மற்றும் அவர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தும் இந்த போக்கு, அவர்களின் உறவை ஆரோக்கியமற்றதாக மாற்றும்.
அவர்கள் மனதிற்குள் நீண்ட காலமாக வெறுப்புகளையும் வைத்திருக்கலாம், இது நிறைய உணர்ச்சி ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடும். அவர்களின் பொஸசிவ் குணம் அளவில்லாதது, இதனால் அவர்களின் துணைவர்கள் அடக்கி வைக்கப்படுவார்கள். விருச்சிக ராசிக்காரர்களின் காதல் உறவில் நம்பிக்கை பிரச்சினைகள் மற்றும் பொறாமை பெரிய தடைகளாக இருக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் குளிர்ச்சியான மற்றும் காதலில் அக்கறை இல்லாத இயல்பு அவர்களின் துணைக்கு தங்கள் மீது அவர்களுக்கு காதல் மற்றும் பரிவு இல்லாத எண்ணத்தை உண்டாக்கும். உறவுகளை விட வேலை மற்றும் லட்சியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அவர்களின் போக்கு புறக்கணிப்பு மற்றும் கைவிடப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தும்.
மகர ராசிக்காரர்களின் அதிக எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் அவர்களின் துணையின் சுயமரியாதையை சிதைக்கும். அவர்களின் துணை தாங்கள் ஒருபோதும் அவர்களுக்கு தகுதியானவர்கள் அல்ல என்று நினைக்கலாம். மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் கூடுதல் பொறுப்பும், வேலையும் காதலில் பொறுப்பற்றவர்களாக மாற்றும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
