Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
இந்த 4 ராசிக்காரங்க தம்பிகளை அப்பா போல வளர்க்கும் ரொம்ப அன்பான அண்ணனாக இருப்பார்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
நம்முடைய குடும்ப அமைப்பு என்பது மிகவும் தனித்துவமானது மற்றும் சுவாரஸ்யமானது. ஒரு குழந்தையின் மீது பெற்றோர்களுக்குப் பிறகு அதிக அக்கறையும், பொறுப்பும் இருப்பது அவர்களின் அண்ணன்/அக்காக்கு மட்டுமே. நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பது அவர்களின் மூத்த சகோதரர்கள்தான். ஒருவரின் வளர்ச்சியில் அவர்கள் உடன்பிறந்தவர்களின் பங்கு என்பது நம் சமூக அமைப்பில் மிகவும் முக்கியமானதாகும்.
ஒருவரின் வாழ்க்கையில் மூத்த உடன்பிறப்புகள் வகிக்கும் பங்கைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும், நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்களின் தம்பி/தங்கை சிறந்த மனிதர்களாக வளருவார்கள். அனைவருக்குள்ளும் சகோதரத்துவமும், அன்பும் இருந்தாலும் சிலரிடம் இந்த குணங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் அன்பான, பொறுப்பான அண்ணனாக இருந்து தங்கள் உடன்பிறப்புகளை வளர்ப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த குணங்களுடன் சிறந்த அண்ணனாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் நேர்மறையான பிடிவாதமும், மன உறுதியும் அவர்களை சிறந்த ராசிகளில் ஒருவராக மாற்றுகிறது. தங்களுக்கு பிடித்தவர்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மையையும், வலிமையையும் உருவாக்குபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை இனிமையானதாகவும் அமைதியானதாகவும் மாற்றுகிறார்கள்.
அவர்களின் அருகிலிருப்பது மகிழ்ச்சியான மற்றும் அமைதியான மனநிலையை வழங்குவதால், அவர்களின் சகோதர/சகோதரிகள் அவர்களுடன் பழகுவதை மிகவும் எளிதாக உணர்கிறார்கள். அவர்களின் தந்தையிடம் பகிராத விஷயங்களைக் கூட இவர்களிடம் பழகுவார்கள். சுக்கிரனால் ஆளப்படுவதால், அவர்கள் அன்பானவர்களாகவும் அக்கறை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், இது அவர்களை அப்பா ஸ்தானத்தில் இருந்து தங்கள் உடன்பிறந்தவர்களை வளர்க்க வைக்கிறது.
சிம்மம்
சிங்கம்தான் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சிம்ம ராசிக்காரர்கள்தான் ராசி சக்கரத்திலேயே மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ராசிக்காரர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த மூத்த உடன்பிறப்புகள் எப்போதும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள், மேலும் தங்களுக்கு நெருக்கானவர்களை பாதுகாக்க எப்போதும் பொறுப்பேற்பார்கள், அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த தலைவர்களாகவும், அன்பான மற்றும் பாதுகாப்பு உணர்வுள்ள நல்ல மூத்த அண்ணனாக திகழ்கிறார்கள்.
துலாம்
அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் நற்குணங்களும், நேர்மறை எண்ணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வார்த்தைகளைத் திறமையாக கையாளும் திறமை கொண்டவர்கள், மேலும் மற்றவர்களைச் சம்மதிக்க வைப்பதில் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் எளிமையாக உரையாடுபவர்கள், மேலும் கற்றுக்கொள்வதிலும் ஆராய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள்.
இந்த குணங்கள் அனைத்தும், தங்களின் இளைய சகோதர சகோதரிகளை அனைத்து விதத்திலும் கவனித்துக்கொள்ளும் மூத்த சகோதரராக இருப்பதற்கு அவர்களைச் சரியானவர்களாக மாற்றுகின்றன. அவர்கள் உறவு முறையில் அண்ணனாக இருந்தாலும் பொறுப்புகளில் அப்பாவாகவே இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள் மற்றும் எப்போதும் குடும்பத்தை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறார்கள், அது நிதிரீதியாக இருந்தாலும் சரி அல்லது உணர்ச்சிரீதியாக பாதுகாப்பதாக இருந்தாலும் சரி அவர்கள் ஒருபோதும் தங்கள் பொறுப்பிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
மகர ராசிக்காரர்கள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் தங்கள் உடன்பிறந்தவர்களை பாதுகாப்பார்கள், இது அவர்களை சிறந்த முன்மாதிரிகளாக மாற்றுகிறது. அவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு அவர்களின் சகோதரர்களை வழிநடத்தும் சிறந்த மூத்த சகோதரர்களாகவும் ஆக்குகிறது, அவர்கள் தங்கள் சகோதர/சகோதரிகளை நனறாக வளர்ப்பதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
