Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசிக்காரர்கள் அவர்களின் வயதுக்கு மீறிய அறிவும், அனுபவமும் உள்ளவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவர்களின் அனுபவமும், புத்திக்கூர்மையும் மிகவும் அவசியமானதாகும். ஒருவரின் புத்திசாலித்தனம் என்பது எப்போதும் அவர்களின் வயதைப் பொறுத்ததல்ல. சிலர் இளம் வயதிலேயே வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் மனித இயல்பு பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருப்பார்கள். அதற்கு அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஜோதிடத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே உள்ளுணர்வு, சிந்தனைத்திறன் மற்றும் உணர்ச்சிரீதியான புத்திசாலியாக இருப்பார்கள். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள், வாழ்க்கையின் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள், மேலும் வாழ்நாள் முழுவதும் ஞானத்தை தங்களுக்குள் சுமந்து வாழ்கிறார்கள். தங்கள் வயதுக்கு மீறிய அனுபவமும், அறிவும் கொண்டவர்களாக இருக்கும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். குழந்தைகளாக இருக்கும் போதே, அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்படுவார்கள் மற்றும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், கட்டமைப்பு, பொறுமை மற்றும் நீண்டகால சிந்தனை பற்றிய இயல்பான புரிதலைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள், மேலும் செயல்படுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தீவிரமாக சிந்திக்கிறார்கள். அவர்களின் எதார்த்தமான கண்ணோட்டம் அமைதியான மற்றும் நிலையான அணுகுமுறையுடன் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. அவர்கள் மிகச்சிறிய வயதிலேயே பெரிய பொறுப்புகளை சுமப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு மனப்பான்மையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்த அணுகுமுறையும் கொண்டவர்கள். அவர்கள் எந்தவொரு முடிவையும் உணர்வுகளின் அடிப்படையில் எடுக்க மாட்டார்கள், மேலும் அனைத்து விஷயத்தையும் லாஜிக்காக அணுகுவார்கள், இதனால் அவர்கள் சமநிலையான கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை பார்க்க முடியும்.
கிரகங்களின் இளவரசரான புதன் ஆதிக்கம் செலுத்தும் கன்னி ராசிக்காரர்களின் ஞானம் அவர்களின் கவனிக்கும் திறன் மற்றும் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை புரிந்துகொள்ளும் திறனில் உள்ளது. அவர்கள் பேசுவதற்கு முன்பு ஆழமாக சிந்திக்கிறார்கள், மேலும் அவர்களின் ஆலோசனை பொதுவாக துல்லியமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வயதிற்கு அப்பாற்பட்ட உணர்ச்சி மற்றும் ஆன்மீக ஞானத்தைக் கொண்டுள்ளனர். வாழ்க்கை பெரும்பாலும் அவர்களை பெரும்பாலும் மிகச்சிறிய வயதிலேயே தீவிர அனுபவங்களுக்குள் தள்ளுகிறது, இது மனித இயல்பைப் பற்றி ஆழமான புரிதலை அவர்களுக்கு வழங்குகிறது.
மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள், மக்கள் மற்றும் சூழ்நிலைகளை ஊடுருவி பார்க்கிறார்கள். மற்றவர்கள் கவனிக்காத மறைக்கப்பட்ட நோக்கங்கள் அல்லது உணர்ச்சிகளை அவர்களால் எளிதில் உணர முடியும். அவர்களின் நுண்ணறிவு அவர்களை சக்திவாய்ந்த ஆலோசகர்களாகவும், திட்டமிடுபவர்களாகவும் மாற்றுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், அவர்களின் சிந்தனை எப்போதும் அவர்களின் வயதை மீறியதாக இருக்கும். புதுமை மற்றும் வழக்கத்திற்கு மாறான சிந்தனையின் கிரகமான யுரேனஸால் ஆளப்படும் கும்ப ராசிக்காரர்கள், மற்றவர்கள் தவறவிடும் விஷயத்தை அவர்கள் நுட்பமாக கவனிக்கிறார்கள்.
அவர்கள் புத்திக்கூர்மை மற்றும் உள்ளுணர்வின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளனர், இது அவர்களை மனிதர்களைப் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள அனுமதிக்கிறது. அவர்கள் காலம் காலமாக உள்ள வழிமுறைகளை எதிர்ப்பதாலும், முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாலும் அவர்களின் ஞானம் பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றியதாக பிரதிபலிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












