Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
ஒரு ரூபாயை கோடி ரூபாயாக மாற்றும் திறமையுள்ள 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பணம் சம்பாதிப்பது என்பது அனைவராலும் செய்யக்கூடியதுதான் ஆனால் பணத்தை திறமையாக கையாளுவது என்பது அனைவராலும் செய்யக்கூடியதல்ல. சிலர் இயற்கையாகவே பணத்தை தாராளமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், அதேசமயம் சிலர் பணத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், சிலர் ஒன்றை பத்தாக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் பிறந்த ராசியின் அடிப்படையில் அவர்கள் பணத்தை எப்படி கையாளுவார்கள் என்பதை நிர்ணயிக்கக்கூடும். அதன்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் திறமைசாலியாகவும், பணத்தை சேமிப்பதில் கில்லாடியாகவும் இருப்பார்கள். பணத்தை சிக்கனமாக செலவிடும் போக்கு, சிறப்பான பட்ஜெட் உருவாக்கும் திறன் மற்றும் நீண்டகால நிதி திட்டமிடல் காரணமாக அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பணத்தை கையாளுவதில் திறமைசாலியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். அவர்கள் தங்களின் ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்புக்காக அறியப்படுகிறார்கள். மகர ராசிகாரர்கள் ஒழுக்கம் மற்றும் கட்டமைப்பின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், அவர்கள் பெரும்பாலும் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதிலும், விடாமுயற்சியுடன் சேமிப்பதிலும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் பணத்தை தங்களுக்கான அடையாளத்தையும், பாதுகாப்பையும் உருவாக்குவதற்கான ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். அவர்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் வசதியை விரும்புபவர்கள். அவர்கள் எப்போதும் பொருள்சார்ந்த பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மற்றும் இயல்பாகவே பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பார்கள். அவர்களின் நிதானம் மற்றும் மன உறுதி நீண்டகால பாதுகாப்பை அளிக்கும் செல்வத்தை உருவாக்க அவர்களுக்கு உதவுகிறது. சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் நுட்பமான பார்வை கொண்டவர்கள் மற்றும் லாபத்தைக் கொடுக்கும் முதலீடுகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.
கன்னி
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு திறன் மற்றும் தீவிர கவனமுள்ளவர்கள். இவை இரண்டும் பணத்தை சிறப்பாக நிர்வகிக்க தேவைப்படும் அத்தியாவசிய குணங்களாகும். அவர்கள் பெரும்பாலும் சிறப்பான பட்ஜெட்டை உருவாக்குவார்கள், செலவுகளை ஆராய்வார்கள், தங்களின் நிதி முடிவுகளை முழுமையாக ஆராய்வார்கள். அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் செய்ய நீண்டகாலம் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அது அவர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுக்கும் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண விஷயங்களிலும், நிதி வியூகம் குறித்தும் ஆழமான புரிதல் உண்டு, குறிப்பாக முதலீடு செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். அவர்கள் வளமான சிந்தனை உடையவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்க பயப்படாதவர்கள். அவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு பணத்தை எப்படி முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது, மேலும் அவர்கள் தோல்விகளை சந்தித்தாலும் பின்னடைவுகளிலிருந்து முன்பை விட வலிமையாக மீண்டு வருபவர்களாக இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












