Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
இந்த 4 ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்பவும் தவறாதான் இருக்குமாம்... அதனாலேயே ரொம்ப கஷ்டப்படுவாங்க...!
ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கியமான விஷயங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் இருக்கிறது. சிலர் சரியாக சிந்தித்து உறுதியான முடிவுகளை எடுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆனால் சிலர் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது அதிக போராட்டத்துக்கு ஆளாகிறார்கள், சிலர் தீவிர அழுத்தத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
அவர்கள் தங்களின் தவறான முடிவுகளால் வாழ்க்கையில் முக்கியமான வாய்ப்புகளை இழக்கிறார்கள். இதனால் அவர்கள் தோல்வி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் இதுபோல தவறான முடிவுகளால் தங்கள் எதிர்காலத்தை சிதைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் தவறான முடிவுகளை எடுப்பவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் ராஜ தந்திரத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் எடைபோட்டு, பல கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்கிறார்கள், இது பெரும்பாலும் சரியான முடிவுகள் எடுக்க விடாமல் தடுக்கிறது. தவறான தேர்வு செய்துவிடுவோமோ என்ற அவர்களின் பயம் அவர்களைத் முடிவுகளை எடுப்பதை தள்ளிப்போடச் செய்து, மதிப்புமிக்க வாய்ப்புகளை இழக்கச் செய்யலாம்.
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் முடிவெடுக்கும் தன்மையைக் கடக்க காலக்கெடுவை நிர்ணயிப்பது அல்லது தங்கள் உள்ளுணர்வை நம்புவது போன்ற முடிவெடுக்கும் உத்திகளை உருவாக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக விடும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்படுவதால், சரியா முடிவுகளை எடுப்பது அவர்களுக்கு கடினமாகிறது. அவர்களின் உள்ளுணர்வு வலுவானதாக இருக்கலாம், ஆனால் அது எப்போதும் நம்பகமானதாக இருக்காது. மீன ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை, முடிவுகளிலிருந்து பிரிக்க போராடலாம், இது திடீர் முடிவுகள் அல்லது முடிவெடுக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும்.
முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்த, மீன ராசிக்காரர்கள் உணர்ச்சித் தெளிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்குப் பதிலாக சிந்தனையை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் தகவமைப்புத் திறனுக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் இதே குணங்கள் அவர்களை முடிவெடுக்க முடியாதவர்களாகவும் மாற்றக்கூடும். அவர்கள் மனதில் எப்போதும் பல்வேறு விதமான யோசனைகள் சுழன்று கொண்டிருப்பதால் அவர்களால் ஒரு விஷயத்தில் உறுதியான முடிவை எடுக்க முடியாது.
மிதுன ராசிக்காரர்கள் பல முடிவுகளில் சிக்கிக் கொள்வதை விட, தங்கள் விருப்பங்களில் கவனம் செலுத்தவும் முன்னுரிமை அளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தீவிரமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள். இதனால் மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கும். அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தத் தேவைகளை விட தங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், இதனால் முடிவெடுக்க முடியாத நிலை மற்றும் மக்களை மகிழ்விக்கும் முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
கடக ராசிக்காரர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க வலுவான சுய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
