இந்த 4 ராசிக்காரங்க அவங்க சத்தியத்தை எப்போதுமே நிறைவேற்ற மாட்டார்களாம்... துளியும் நேர்மையில்லாதவங்க இவங்க...!

சிலர் தங்கள் வாழ்க்கையில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுக்கும் சத்தியவான்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் இதற்கு முற்றிலும் எதிர்மாறாக தாங்கள் கொடுத்த வாக்கை அந்த கணமே மறந்து விடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வாக்குறுதிகளை மீறுபவர்களாக இருப்பார்கள்.

ஒரு வாக்குறுதியை அளிப்பது எவ்வளவு எளிமையானதாகத் தோன்றினாலும், அதைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதனால்தான் சில ராசிக்காரர்கள் மிகவும் எளிதாக தங்கள் வாக்குறுதிகளை எளிதில் மீறுகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கொடுத்த வாக்கை எளிதில் மீறுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Zodiac Signs Who Always Break Their Promises

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உக்கிரமான, உணர்ச்சிவசப்பட்ட தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் துளியும் யோசிக்காமல் அவசர அவசரமாக வாக்குறுதிகளை அளிப்பார்கள், ஆனால் அவற்றை அதைவிட வேகமாக மறந்துவிடுவார்கள். ஒரு மேஷ ராசி நண்பர் உங்களுக்கு இருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவ உறுதியளிப்பார்கள், ஆனால் கடைசி நிமிடத்தில் அதை மறந்துவிட்டு, அவர்களின் வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளிலிருந்து எப்போதும் தப்பித்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை பெரும்பாலும் அவர்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போக வழிவகுக்கிறது.

மிதுனம்

தகவல்தொடர்புக்கான கிரகமான புதன், மிதுன ராசிக்காரர்களின் அதிபதியாக இருக்கிறார், அவர்கள் வசீகரமான மற்றும் நம்பிக்கைக்குரிய பேச்சாளர்களாக இருப்பார்கள். அவர்கள் புத்திசாலித்தனமானவர்கள், மற்றவர்களை வெல்வதில் திறமையானவர்கள், வார்த்தைகளால் சாதிப்பதில் மிகவும் திறமையானவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் வாக்குறுதியை அளித்து அதை மீறுகிறார்கள். ஆனால் அவர்கள் இதை வேண்டுமென்றே செய்வதில்லை, சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் தங்கள் வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகிறது. எனவே ஒருபோதும் மிதுன ராசிக்காரர்களின் வாக்குறுதியை நம்பாதீர்கள்.

கடகம்

அதிக உணர்திறன் மற்றும் அக்கறை கொண்ட கடக ராசிக்காரர்கள், மற்றவர்களின் தேவைகள் மற்றும் பாதிப்புகளைப் புரிந்துகொள்வதில் திறமையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் அக்கறையான இயல்பு கொண்டவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் மற்றவர்களை எளிதில் ஏமாற்றக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறுவதை அல்லது நிறைவேற்ற முடியாமல் போவதை தங்களின் கண்ணீர் அல்லது குற்ற உணர்வு மூலம் மறைத்து விடுவார்கள். அவர்கள் மற்றவர்களின் பாதிப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் உலகில் அமைதியைப் பரப்பும் இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அதற்காக அவர்கள் சில சமயங்களில் சூழ்ச்சி செய்பவர்களாக இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் மோதலைத் தவிர்க்க பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை மயக்குவதிலும், அவர்களை கட்டுப்படுத்துவதிலும் திறமையானவர்கள். துலாம் ராசிக்காரர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோசமானவர்களாக இருக்கிறார்கள். துலாம் ராசிக்காரர்களின் வாக்குறுதிகளை நம்பி எந்த செயலிலும் ஒருபோதும் இறங்கக்கூடாது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, May 12, 2025, 10:02 [IST]
Desktop Bottom Promotion