Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 4 ராசிக்காரங்க திருமணத்துக்கு அப்புறம் அதிகம் சண்டை போடுறவங்களா மாறிடுவாங்களாம்...உங்க ராசி இதுல இருக்கா?
திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்கையிலும் மிகவும் முக்கியமான உறவாகும். ஆனால் அனைவரின் திருமணமும் மகிழ்ச்சியானதாக இருக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் நாள்தோறும் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளே அதற்கு சாட்சி.
சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக திருமண வாழ்க்கை மோசமானதாக அமையலாம், ஆனால் சிலர் அவர்களின் சொந்த தவறுகளாலேயே தங்களின் திருமண வாழ்வை அழித்துக் கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது சகஜம் ஆனால் சிலர் வேண்டுமென்றே திருமணத்திற்குப் பிறகு அதிக சண்டை போடுவார்கள்.

இவர்கள் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், இவர்களுடன் எப்படி பேசுவது என்று புரியாமல் இவர்களின் வாழ்க்கைத்துணை திண்டாடுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கடுமையானவர்கள் மற்றும் பிடிவாதமானவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் போது மிகப்பெரிய எதிரிகளாக மாறுவார்கள். சண்டை போடுவதற்கான சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்கள் அதனை பெரிதாக்கி விடுவார்கள்.
ஒருவேளை அவர்களின் வாழ்க்கைத்துணை மென்மையானவராக இருந்தால் அவர்கள் அதை தீவிரமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களுடனான சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி அவர்களிடம் மன்னிப்பு கேட்பதுதான்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமான குணம் கொண்டவர்கள், ஆனால் அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் சண்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சண்டையைத் தொடங்கி விட்டால் அது நீண்ட நாட்கள், சில சமயங்களில் மாதக்கணக்கில் கூட நீடிக்கும், அவர்கள் ஒருபோதும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை.
அவர்கள் அரிதாகவே தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் தாங்கள் செய்வது எப்போதும் சரியானதுதான் என்ற மனநிலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் தவறுகளை எப்போதும் பாதுகாக்க முனைகிறார்கள். அவர்களுடனான சண்டையை அவர்கள் மட்டுமே முடிவுக்கு கொண்டு வரமுடியும்.
விருச்சிகம்
சண்டை என்று தங்கள் வாழ்க்கைத்துணை உணருவதற்கு முன்னரே அவர்கள் அந்த சண்டையை பெரியதாக மாற்றிவிடுவார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அவர்கள் பெரிய சண்டையை உருவாக்குவார்கள், மேலும் எப்போதும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
அனைத்திற்ககும் மேலாக சண்டையில் ஜெயிப்பதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள், எனவே அவர்களின் வாழ்க்கைத்துணை அவர்களுடன் சண்டையிடும் போது அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை சொல்வார்கள். அது எதிரில் இருப்பவர்கள் மனரீதியாக துன்புறுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்களிடம் பேசும்போது கூடுதல் கவனம் தேவை. அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எனவே, இந்த பண்பு அவர்களை மிகவும் விவாதிக்கக்கூடியவராக மாற்றுகிறது. ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லி நீங்கள் அவர்களை காயப்படுத்தி விட்டால், அவர்கள் அதை எப்போதும் மறக்க மாட்டார்கள்.
பின்னாளில் சண்டை ஏற்படும் போது அது எத்தனை வருடம் கழித்து இருந்தாலும் சரி அவர்கள் அதை சரியாக நியாபகம் வைத்து உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். அவர்களுடனான சண்டைக்கு முடிவு என்பதே இல்லை. அவர்கள் வெளித்தோற்றத்திற்க்கு அமைதியாக இருந்தாலும் மிகவும் புண்படுத்தக்கூடியவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












