Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
இந்த 4 ராசிக்காரங்க காதல் மற்றவர்களின் காதலை விட சீக்கிரம் தோல்வியில் முடிஞ்சிருமாம்...உங்க ராசி இதுல இருக்கா?
காதல் உறவு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கையில் காதல் கொடுக்கும் மகிழ்ச்சியை வேறு எந்த விஷயத்தாலும் கொடுக்க முடியாது. ஆனால் சிலருக்கு காதலே பெரிய பிரச்சினையாக இருக்கும். ஏனெனில் அவர்களின் காதல் எளிதில் முறிந்துவிடும். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் காதலில் ஆர்வத்தை இழந்து, சீக்கிரமே அந்த உறவிலிருந்து விலகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்கள் உறவுகளில் எளிதில் சலிப்படைபவர்களாகவோ அல்லது திருப்தி இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களை காதலிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களின் காதல் விரைவில் முறிந்து விடும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட தன்மைக்கும், உள்ளுணர்வின்படி செயல்படும் போக்கிற்கும் பெயர் பெற்றவர்கள். இது சில சமயங்களில் பொறுப்பற்ற தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும், இதில் அவர்களின் காதலை விரைவில் முறித்துக் கொள்வதும் அடங்கும். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், இது அவர்களுக்கு சமரசம் செய்து காதலில் ஈடுபடுவதை சவாலாக மாற்றும். அவர்கள் தங்களின் அதிகாரம் குறைவது போல் உணர்ந்தால் உடனடியாக அந்த உறவிலிருந்து வெளியேறி விடுவார்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் தங்கள் அமைதியற்ற தன்மைக்கும், எளிதில் சலிப்படையும் குணத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் உற்சாகத்தையும், பல்வேறு வாய்ப்புகளையும் விரும்புகிறார்கள், இது உறவுகளில் எளிதில் சலிப்படைய வழிவகுக்கும். அவர்களின் காதலன்/காதலி அவர்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் சாகச மனப்பான்மைக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டால், அவர்கள் விரைவில் அந்த உறவில் ஆர்வத்தை இழக்க நேரிடும். உணர்ச்சிகளை அறிவுபூர்வமாக அணுகும் அவர்களின் போக்கு, எந்தவொரு உறவிலும் ஆழமாக இணைவதைக் கடினமாக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே எப்போதும் புதிய விஷயங்களை விரும்புபவர்கள், எப்போதும் புதிய எல்லைகளையும் அனுபவங்களையும் தேடுபவர்கள். இந்த ஆர்வம் அவர்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்க உதவுகிறது, அவர்களின் உறவு மிகவும் போரடித்தாலோ அல்லது கணிக்கக்கூடியதாகவோ மாறினால், அவர்கள் அந்த உறவின் மீதான ஆர்வத்தை இழக்க வழிவகுக்கும். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை மிகவும் மதிக்கிறார்கள், எப்போது அவர்களின் உறவு அவர்களின் சுதந்தரத்தை பறிப்பதாக உணர்கிறார்களோ அப்போதே அந்த உறவிலிருந்து வெளியேறி விடுவார்கள். அது எவ்வளவு விரைவாக இருந்தாலும்ச சரி.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறான மற்றும் மனிதாபிமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், இது அவர்களின் துணையுடன் உணர்ச்சிரீதியாக இணைவதை சவாலாக மாற்றும். அவர்கள் சுதந்திரத்தையும், சுய திருப்தியை மதிக்கிறார்கள், இது அவர்களின் துணையின் தேவைகளை விட அவர்களின் சொந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகுக்கும். அவர்களின் துணை அவர்களின் ஆர்வத்தை மதிக்கா விட்டாலோ அல்லது அவர்களின் செயல்களுக்கு தடை விதித்தாலோ அவர்கள் அந்த உறவிலிருந்து விரைவில் வெளியேறி விடுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
