Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
இந்த 4 ராசி பெண்கள் பெற்றோரை பெருமைப்படுத்தும் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு குழந்தையுமே அவர்களின் பெற்றோரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்க வந்த பொக்கிஷங்கள்தான். பெண் குழந்தைகள் எப்போதுமே பெற்றோருக்குத் தேவதைகள்தான். ஒரு பழைய ஐரிஷ் பழமொழி கூறுவது என்னவெனில், "A son is a son till he gets his wife. A daughter is a daughter all of her life,". பெண் குழந்தைகளே ஒரு வீட்டின் முதுகெலும்பாகவும், ஐஸ்வரியத்தின் அடையாளமாகவும் இருக்கிறார்கள்.
அனைத்து பெண் குழந்தைகளுமே சிறப்பானவர்களாக இருந்தாலும் சிலர் கூடுதல் ஸ்பெஷலானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரிடம் பழகும் விதம் வித்தியாசமானதாக இருந்தாலும் சிலர் அன்பு, அக்கறை மற்றும் நேசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம். உண்மைதான் சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையை மாற்றும் தேவதைகளாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் லட்சியவாதிகள் மற்றும் மிகவும் பொறுப்பானவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ச்சியான முடிவெடுக்க முடியாத தருணங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும், அது அவர்களின் குடும்பத்தையும், மிக முக்கியமாக, அவர்களின் பெற்றோரையும் பாதிக்கும் முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார்கள்.
அவர்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை நோக்கி அதிக கவனம் செலுத்தினாலும், அவர்கள் தங்கள் வெற்றிகளையும் சாதனைகளையும் தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது உறுதி. அவர்கள் தங்கள் பெற்றோர் எப்போதும் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். இவர்களே குடும்பத்தின் உயிர் சக்தியாக இருக்கிறார்கள்.
கடகம்
கடக ராசி மகள்கள் உணர்ச்சிவசப்படும் ஆன்மாக்கள், அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் பெற்றோரின் மனதை நன்கு அறிந்தவர்கள். சந்திரனால் ஆளப்படும் இவர்கள் தங்கள் பெற்றோர் மீது அதீத அக்கறைக் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்த மகள்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் புரிதலையும் வழங்குகிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதில் திறமைசாலிகள். அதனால்தான் அவர்கள் தங்கள் பெற்றோருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருக்கிறார்கள்.
கன்னி
கிரகங்களின் இளவரசரான புதன் ஆளும் கன்னி ராசி பெண்கள் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வதில் ஒரு சிறுகுறை கூட வைக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோருக்கு அசாதாரண அன்பையும், பாசத்தையும் பொழிந்து அவர்களுக்கு சிறந்ததை மட்டுமே கொடுக்க விரும்புகிறார்கள்.
இந்த ராசி பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஒழுங்கு மற்றும் முழுமையை கொண்டு வருகிறார்கள், குடும்பத்தில் அனைத்தும் சீராக இருப்பதை உறுதி செய்கிறார்கள். கன்னி ராசி பெண்களை பெற்ற பெற்றோர்கள் பெரும்பாலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான குடும்பத்தை அனுபவிக்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த மகள்கள் வாழ்க்கையை அணுகுவதில் மிகுந்த ஆர்வமும், தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்கள். வீட்டில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் தன்னிச்சையாக சமாளிப்பார்கள் மற்றும் சூழ்நிலைகளை திறமையாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைக் கண்டறிவார்கள்.
இந்த ராசியில் பிறந்த மகள்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை வழங்குகிறது. விருச்சிக ராசி மகள்கள் உள்ள பெற்றோர் பாதுகாப்பான மற்றும் தன்னிறைவான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

