Latest Updates
-
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்..
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் 2026-ல் அதிர்ஷ்ட தேவதைகளாக ஜொலிக்க போறாங்களாம்... உங்க பிறந்த தேதி என்ன?
2026 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. வரப்போகிற புது ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அது எப்படிப்பட்ட மாற்றம் என்பது அவரவர் ராசியைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொள்வது எப்படி முக்கியமானதோ அதேபோல எண்கணித கணிப்புகளும் முக்கியமானது.
எண் கணிதம் என்பது ஒருவரின் பிறந்த தேதிதான் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் ஆளுமையைப் பற்றி கணிப்பதாகும். எண் கணிதத்தின்படி, 2026 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களின் அதிர்ஷ்டம், அவர்களின் தந்தை அல்லது கணவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்த பெண்கள் 2026-ல் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 3
அனைத்து மாதத்திலும் 3, 12, 21, மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு எண் 3 உரியதாகும். இந்த எண்ணின் அதிபதி குரு பகவான் ஆவார். குருபகவான் ஞானத்திற்கும், மரியாதைக்கும் அடையாளமாகத் திகழ்கிறார். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பிறந்தவுடனேயே, சமூகத்தில் அவர்களின் தந்தையின் மரியாதை அதிகரிக்கிறது.
தந்தையின் வேலையில் இருந்த தடைகள் நீங்கி, அவர் வெற்றிப் பாதையில் பயணிக்கிறார். இவர்களின் வருகையால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. இந்த வருடம் அவர்களின் அதிர்ஷ்டம் அவர்களுடைய கணவர்களுக்கும் மிகவும் ஆதரவாக இருக்கும். அவர்களின் உதவியால் அவர்களின் கணவரின் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
எண் 6
6, 15, மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு விதி எண் 6 ஆகும். இந்த எண்ணின் அதிபதி காதல் மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன்தான். சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிப்பவராவார். இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் பிறந்த பிறகு, தந்தையின் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
அவர்கள் பிறந்த பிறகு அவர்கள் குடும்பத்தின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் மேலும் குடும்பத்தில் அமைதியான சூழலும் நிலவும். அவர்கள் அவர்களுடைய தந்தைக்கு அதிர்ஷ்ட தேவதைகளைப் போன்றவர்கள். இந்த ஆண்டு அவர்களின் அதிர்ஷ்டம் அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையிலும் பிரகாசத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அவர்களின் கணவர் இப்போது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
எண் 5
5, 14, மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களின் விதி எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன் ஆவார். புதன் வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. எண் 5-ல் பிறந்த பெண்கள் இருந்தால், அவர்களின் தந்தை தனது தொழிலில் எதிர்பாராத லாபங்களை ஈட்டுவார்.
அவர்களின் தந்தை மற்றும் கணவர் அவர்களின் வருகைக்குப் பின் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் புத்திசாலித்தனமும், அதிர்ஷ்டமும் மறைமுகமாக அவர்களின் தந்தையின் அல்லது கணவரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவும். அவர்களின் வருகைக்குப்பின் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும்.
எண் 1
அனைத்து மாதத்திலும் 1, 10, 19, மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களின் விதி எண் 1 ஆகும். இந்த எண் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுகிறது. சூரியன் தலைமைப் பண்புக்கும் தந்தைக்கும் உரிய கோளாகும். இந்த தேதிகளில் பிற்ந்த பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் பிறந்த பிறகு, அவர்களின் தந்தையின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி, அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். அவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் பெரும் உயரங்களை அடைவது மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தின் பெயரையும் காப்பாற்றுவார்கள். 2026-ல் அவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












