Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
இந்த 4 ராசிக்காரர்களை யாராலும் ஏமாற்ற முடியாது... யாரோட தந்திரமும் இவங்கள எதுவும் பண்ண முடியாதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஓர் தனித்திறமை இருக்கும். மன வலிமை மற்றும் திட்டமிடுதலில் சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விஞ்சும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர். அசாதாரண புத்திசாலித்தனம், தந்திரங்கள் மற்றும் மற்றவர்களின் திட்டங்கள் மற்றும் நோக்கத்தை புரிந்து கொள்வது என்று அவர்கள் அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களின் எந்த மன விளையாட்டுகளும் அவர்களிடம் செல்லுபடியாகாது, அதேபோல மற்றவர்களிடம் மன விளையாட்டுகள் விளையாடி வெற்றி பெறுவதில் அவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள். இந்த பதிவில் யாராலும் ஏமாற்ற முடியாத தந்திரசாலிகளாக இருக்கும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனத்திற்கும், கூர்மையான அறிவுக்கும் பெயர் பெற்றவர்கள். கிரகங்களின் இளவரசனான புதனால் ஆளப்படும் இவர்கள், மக்களையும், சூழ்நிலைகளையும் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக படிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் தங்கள் உத்திகளை சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் மாற்றியமைக்க முடியும், இதனால் அவர்களின் அடுத்த நகர்வை கணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
மிதுன ராசிக்காரர்களின் எண்ணங்களையும், திட்டங்களையும் தெரிந்து கொள்வது என்பது காற்றைப் பிடிக்க முயற்சிப்பது போன்றது, அவர்கள் எப்போதும் அனைவருக்கும் ஒரு படி மேலே இருப்பார்கள். அவர்களின் வசீகரமும் பேச்சாற்றல் எதிரிகளை எளிதில் தோற்கடித்து விடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மனித ஆன்மாக்களைப் பற்றிய தீவிரமான மற்றும் ஊடுருவக்கூடிய நுண்ணறிவைக் கொண்டுள்ளனர். செவ்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனதை படிப்பது மற்றும் தந்திரமாக திட்டமிடுவதில் வல்லுநர்களாக உள்ளனர்.
அவர்கள் எந்தவொரு விளையாட்டையும் முடிப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்கள், பெரும்பாலும் தங்கள் எதிரிகளைத் தாக்குவதற்கு முன்பு அவர்களின் நடவடிக்கைகளை அமைதியாகக் கவனித்து பகுப்பாய்வு செய்கிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கங்களை மறைத்து வைக்கும் திறன் எந்தவொரு மனப் போரிலும் அவர்களுக்கு பெரிய வெற்றியைத் தருகிறது. விருச்சிக ராசிக்காரர்களின் புத்திக்கூர்மையை குறைத்து மதிப்பிடுபவர்கள் நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மன விளையாட்டுகளில் ஒரு நுணுக்கமான மற்றும் பகுப்பாய்வு அணுகுமுறையைக் கொண்டுள்ளார்கள். மிதுன ராசிக்காரர்களைப் போலவே, புதனால் நிர்வகிக்கப்படும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் புத்திக்கூர்மையையும், விமர்சனக் கண்ணோட்டத்தையும் ஒன்றாக இணைக்கிறார்கள். அவர்கள் திட்டமிடுவதில் அசாதாரணமானவர்கள், அவர்கள் எந்தவொரு சின்ன விவரத்தையும் தவற விடமாட்டார்கள், ஒரு விஷயம் செய்வதற்கு முன் அதற்கான 100 முடிவுகளை அவர்கள் கணித்திருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்களுடன் மன விளையாட்டுக்களை விளையாடும் போது அல்லது மோதும் போது முழு திறமையையும் பயன்படுத்த வேண்டும், அவர்கள் ஏற்படுத்தும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவர்களின் துல்லியமும் பொறுமையும் அவர்களை எந்தவொரு மன சண்டையிலும் வெல்ல முடியாதவர்களாக மாற்றுகின்றன.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தந்திரமான மற்றும் ஒழுக்கமான சிந்தனையாளர்கள், நீண்டகால திட்டங்களை வகுத்து அவற்றை துல்லியமாக செயல்படுத்தும் திறன் கொண்டவர்கள். ஒழுக்கம் மற்றும் கர்மாவின் கிரகமான சனியால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் மன விளையாட்டுகளை முறையான மற்றும் பொறுமையான நடத்தையுடன் அணுகுவார்கள்.
அவர்கள் காத்திருக்கும் மற்றும் காக்க வைக்கும் விளையாட்டை விளையாடுவதில் சிறந்தவர்கள், அவர்கள் உறுதியாக இருப்பதன் மூலம் தங்கள் எதிரிகளை தவறு செய்ய வழிவகுக்கிறார்கள். தீவிரமான அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பது அவர்களின் திறன் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும், இது அவர்களை வெல்வதை கடினமாக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
