Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
இந்த 3 ராசிக்காரங்க வெள்ளி அணியக்கூடாது.. இல்லன்னா துரதிர்ஷ்டம் துரத்தும்... பண பிரச்சனை அதிகரிக்கும்..
Silver As Per Astrology: ஜோதிடத்தின் படி, ஒருவர் அணியும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உலோகங்கள் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. உதாரணமாக, இரும்பு சனி பகவானுக்கு உரிய உலோகம், தங்கம் குரு பகவானுக்கு உரியது, அதேப் போல் வெள்ளி சந்திரனுக்கு உரியது.
தங்கம் விலை உயர்வானது என்பதால், அனைவரும் தங்கத்தை வாங்கி அணிவது என்பது கடினம். ஆனால் வெள்ளியோ அப்படி இல்லை. அதன் விலை குறைவு மற்றும் இது ஒருவரது அழகை மேம்படுத்தியும் காட்டும். சந்திரனுடன் தொடர்புடைய வெள்ளியை அணிந்தால், அது ஒருவரை அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். ஜோதிடத்தில் சந்திரன் நீருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இவற்றில் சில ராசிகள் நெருப்பு உறுப்புகளாகவும், சில ராசிகள் நீர் உறுப்புகளாகவும், சில பூமி உறுப்புகளாகவும், சில ராசிகள் காற்று உறுப்புகளாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் நீர் உறுப்புடன் தொடர்புடைய வெள்ளியை சில ராசிக்காரர்கள் அணிந்தால், அதன் விளைவாக பல பாதிப்புகள் ஏற்படலாம். இப்போது எந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணியக்கூடாது என்பதைக் காண்போம்.
மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷம் நெருப்பு உறுப்பாகும். நீரும் நெருப்பும் எதிரெதிரானவை. எனவே இந்த மேஷ ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால், அதன் விளைவாக பண இழப்பு ஏற்படும். வெள்ளியால் ஆன எந்த ஆபரணங்களை அணிந்தாலும், அவர்களின் நிதி நிலை பலவீனமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் ஒரு சூடான கிரகமாகும். இந்த சிம்ம ராசியும் நெருப்பு உறுப்பாகும். எனவே சிம்ம ராசிக்காரர்கள் குளிர்ச்சியான வெள்ளியை அணிந்தால், நஷ்டம் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த ராசிக்காரர்கள் வெள்ளியை அணிந்தால், அவர்களின் முக்கியமான வேலைகள் கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் பண இழப்புக்களையும், நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு. இந்த குருவிற்கு உரிய உலோகம் தங்கம். இந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணிவதை விட்டு, வெள்ளியால் ஆன ஆபரணங்களை அணிந்தால், அவர்களுக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு வெள்ளி உகந்தது அல்ல.
எந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணியலாம்?
ஜோதிடத்தின் படி, கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது மங்களகரமான பலன்களைத் தரும். மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. இந்த ராசிக்காரர்களைத் தவிர, மற்ற ராசிக்காரர்கள் அணிந்தால், சாதாரண பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications