Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
இந்த 4 ராசிக்காரங்க பேச்சாற்றலில் மன்னர்களாம்... பேசியே மயக்குவதில் கில்லாடிகளாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒருவரின் ராசி மூலம் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் இயல்பு பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
ஒருவரின் ராசி அவர்களின் சில தனித்துவமான திறமைகளைப் பற்றி விளக்கும். அதன்படி சில ராசிக்காரர்கள் அதிகம் பேச விரும்புவார்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வார்த்தைகளால் அனைவரின் இதயங்களையும் வெல்வார்கள். அவர்கள் விரும்பும் அனைத்தையும் பேச்சாலேயே அவர்களால் அடைய முடியும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
புத்திசாலித்தனத்தின் கிரகமான புதன் மிதுன ராசியை ஆள்கிறது மற்றும் முன்பின் தெரியாதவர்களுடன் சிறப்பாக பேசும் சிறப்பு திறன் கொண்டவர்கள். புதன் ஆள்வதால், மிதுன ராசிக்காரர்கள் உரையாடல் கலையில் மிகவும் திறமையானவர்கள், மேலும் அவர்கள் தங்கள் பேச்சாற்றல் மூலமே மக்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து விடுவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் பேச்சு சம்பந்தமான துறையில் சிறப்பாக செயல்படுவார்கள், மேலும் அதன்மூலம் பெரும்பணம் சம்பாதிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி நட்பைப் பேணுவது மற்றும் உரையாடல் மூலம் மற்றவர்களை கவர்வது என்பது நன்றாகத் தெரியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன், எனவே சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை மக்களுடன் செலவிடுகிறார்கள், உரையாடல் மூலம் விரைவாக உறவுகளை உருவாக்குகிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எந்தவொரு பிரச்சினையையும் பற்றி விரிவாகப் பேசக்கூடியவர்கள் மற்றும் தங்களின் தனிப்பட்ட நலன்களையும் கவனித்துக்கொள்ளக் கூடியவர்கள்.
எதைப்பற்றியும் வெளிப்படையா பேசக்கூடிய அவர்கள் மற்றவர்களின் ஆறுதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தங்களது புத்திக்கூர்மையை வளர்த்துக் கொள்ள அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதியும் புதன் கிரகமாக இருப்பதால் கன்னி ராசிக்காரர்களும் பேச்சாற்றலில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பேச்சாற்றல் மூலம் யாருடனும் விரைவாக நட்பை உருவாக்கிக் கொள்ளக்கூடியவர்கள், உரையாடல் மூலம் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடியவர்கள்.
அதிகாரியோ, தலைவரோ, வயதில் மூத்தவர்களோ யார் அவர்களுக்கு எதிரில் இருந்தாலும், எந்த தயக்கமும் இன்றி அவர்களுடன் பேசி, தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் பாதியை தங்கள் வார்த்தைகளாலேயே நீக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
துலாம்
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால் இந்த ராசிக்காரர்கள் உரையாடலில் வல்லுநர்கள். அவர்கள் பேச விரும்பும் அளவுக்கு, மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவும் விரும்புகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதிலும், நன்றாகப் பேசுவதிலும், தகவல்களைப் பகிர்ந்து கொள்வதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எந்த முக்கியமான தலைப்பைப் பற்றியும் பேசத் தயங்க மாட்டார்கள் மற்றும் வழிகாட்டுதலை விரும்புபவர்களுக்கு சரியான வழியை காட்டும் திறமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதனால்தான் துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் உயர்ந்த பொறுப்புகளில் காணப்படுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
