Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இந்த 4 ராசிக்காரங்க அவங்க குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பார்களாம்... இவங்க இல்லாம எதுவுமே நடக்காது...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியும் அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன, அவற்றில் நிதி தொடர்பான அணுகுமுறையும் அடங்கும். சில ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி நிலைக்கு பொறுப்பேற்கும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர்.
இதனால் அவர்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக மாறுகிறார்கள். அவர்களின் குடும்பத்தில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நிதிரீதியாக குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள், அவர்களின் மனஉறுதி மற்றும் பிடிவாத இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் வலுவான நிதி நிலைக்கு பெயர் பெற்றவர்கள். பணத்தை நிர்வகிப்பதில் அவர்களின் ஒழுக்கமான அணுகுமுறை மற்றும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கவனம் செலுத்துவது அவர்களை இயல்பாகவே குடும்பத்தின் நிதி நிலையைக் கையாள்வதில் திறமையானவர்களாக மாற்றுகிறது.
ரிஷப ராசிக்காரர்கள் குடும்பத்தை பாதுகாக்கிறார்கள் மற்றும் எச்சரிக்கையாக செலவு செய்பவர்களாக இருக்கிறார்கள், இது பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தின்முதுகெலும்பாக இருக்க வழிவகுக்கிறது.
கன்னி
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள், கவனமாகவும் பகுப்பாய்வுரீதியாகவும் செயல்படுபவர்கள். நிதி திட்டமிடுவதிலும், செலவுகளைக் கண்காணிப்பதிலும், முதலீட்டு முடிவுகளை எடுப்பதிலும் அவர்கள் சிறந்து விளங்குவதால், அவர்கள் குடும்பத்தை நிர்வகிப்பவர்களாக மாறுகிறார்கள்.
கன்னி ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் சிக்கலான நிதி விஷயங்களைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது, இது குடும்பத்தின் நிதி நிலையை நிர்வகிப்பதில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றுகிறது. பெரும்பாலும் சரியான முடிவுகளை எடுக்கும் அவர்களின் திறன் அவர்களுக்கு தனித்துவமான நிதி ஆதிக்கத்தை அளிக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனிபகவானால் ஆளப்படும் சிறந்த தலைவராக இருப்பார்கள். அவர்களின் லட்சிய மனநிலையும், திட்டமிடுதலும் அவர்களின் நிதி முயற்சிகளில் நல்ல பலன்களை அளிக்கின்றன. நீண்டகால நிதி இலக்குகளுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறும் அவர்களின் திறன் அவர்களை சிறந்த குடும்பத் தலைவராக மாற்றுகிறது.
மகர ராசிக்காரர்கள் விதிவிலக்கான நிதி ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் பண விஷயத்தில் நல்ல முடிவுகளை எடுப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இது குடும்பத்தின் நிதி நிலையை செழிப்பை நோக்கி வழிநடத்துவதில் அவர்களை நம்பகமான நபர்களாக ஆக்குகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் சிறந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர். சரியான வாய்ப்புகளைக் கண்டறியும் அவர்களின் திறன் பெரும்பாலும் புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளுக்கு வழிவகுக்கிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுக்க பயப்படுவதில்லை, இது அவர்களின் குடும்பத்திற்கு நிதி ஆதாயங்களைத் தரும். அவர்களின் வசீகரமான ஆளுமை மற்றும் உறுதி வீட்டில் அவர்களை நிதி விஷயத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

