Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நிழலை பார்த்தே பயப்படுவாங்களாம்... இவங்கள நம்பி எதையும் செய்யாதீங்க...!
இக்கட்டான சூழ்நிலையின் போதுதான் உங்களுக்குச் சொந்தமானவர் யார், அந்நியர் யார் என்பது தெரியும். ஏனென்றால், ஆபத்து ஏற்படும் போது, அனைவருமே உங்களுடன் இருப்பதில்லை, எனவே தைரியமாக முன்வந்து உங்களை முழுமையாக ஆதரிப்பவர்கள் வெகுசிலரே, பெரும்பாலானோர் அந்த சூழலில் இருந்து தப்பித்து ஓடத்தான் பார்ப்பார்கள்.
ஜோதிடத்தின் படி, ஒருவரின் தைரியம் அல்லது கோழைத்தனம் அவரது கிரகங்களின் நிலை மற்றும் ராசி அடையாளத்தால் பாதிக்கப்படுகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் பிரச்சினை என்றாலெ ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு பிரச்சனையின் போது சூழ்நிலையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் பின்வாங்குகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தைரியம் இல்லாத கோழைகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புடைவர்கள். சிலசமயம் அவர்கள் முட்டாளாகவும், சிலசமயம் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். மிதுனம் ராசிக்காரர்கள் மற்றவர்கள் முன்னிலையில் சாதுர்யமாக செயல்பட விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் திறமைகளையும் புரிதலையும் மற்றவர்களுக்கு காட்ட விரும்புகிறார்கள்.
நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் அவர்களிடம் இல்லாத விஷயங்களை இருப்பதாக நடிக்கிறார்கள். தைரியம் இல்லாவிட்டாலும் அது இருப்பது போல எப்படி நடிக்க வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது அவர்களுக்கே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ அவர்கள் அதிலிருந்து ஓடி ஒழிவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் அனைத்திற்கும் பயப்படுபவர்களாக இருப்பார்கள். பூச்சிகள், சிலந்திகள், எலிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் போன்ற அனைத்து உயிரினங்களைப் பார்த்தும் அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இந்த விஷயங்கள் அவர்களைச் சுற்றி தோன்றினால், அவர்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள்.
பேய் படங்கள் என்றால் அவர்களுக்கு முற்றிலும் ஆகாது. அதனாலேயே இவர்களுக்கு யாரோ ஒருவரின் தேவை எப்போதும் அதிகமாக உள்ளது. வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எப்படி எதிர்கொள்வது என்ற தைரியம் அவர்களுக்குக் கிடையாது. பெரும்பாலும் தனிமையில் இருப்பதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
விருச்சிகம்
அதிகமாகச் சிந்திப்பது விருச்சிக ராசிக்காரர்களிடம் மறைந்திருக்கும் திறமை, அவர்களின் பிரச்சினையும் இதுதான். சூழ்நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, இந்த ராசிக்காரர்கள் தங்கள் கற்பனையால் விஷயங்களை மோசமாக்குவார்கள். அவர்கள் சில சமயங்களில் தங்களுடைய பிடிவாதத்தால் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறி விடுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் சரியானவர்களாக இருக்க முடியாது. தங்களை எப்போதும் சிறந்தவர்களாக காட்டிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே உதவுமாறு அவர்களிடம் கேட்டால் உடனடியாக மறைந்து விடுவார்கள். அவர்கள் கோழைகள் மட்டுமல்ல ஏமாற்றுபவர்களும் கூட.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். எனவே இவர்கள் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் பிறர் விஷயங்களில் தலையிட மாட்டார்கள், அவர்களின் வாழ்க்கையில் மற்றவர்களின் தலையீட்டையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதனால்தான் இவர்கள் எப்போதும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். யாருக்காவது தகராறு போன்றவை ஏற்பட்டால், அவர்கள் அந்த விஷயங்களிலிருந்து விலகி ஓடுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மிக விரைவாக எதிர்மறை ஆற்றலால் சூழப்படுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
