Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
இந்த 4 ராசி பெண்கள் தவறான நபரை காதலிச்சு கஷ்டப்படுவாங்களாம்... இவங்களுக்கு காதலில் அதிர்ஷ்டமே இல்ல...!
காதல் உறவு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உறவாகும். சிலருக்கு காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும், சிலருக்கோ காதல் வாழ்க்கை நரகத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கும். ஒருவரின் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்குமென்பது அவர்களுக்கு அமையும் காதல் துணையைப் பொறுத்துதான் அமைகிறது.
சிலர் துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையில் தவறான நபர்களை காதலிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த தவறை அடிக்கடி செய்கிறார்கள். அவர்களுக்கு காதல் எப்போதும் சவால்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த தவறை எப்போதும் செய்கிறார்கள்.

அவர்களின் ஆழ்ந்த உணர்வுகளும், காதல் மீதான தீவிர ஆர்வமும் பெரும்பாலும் தவறான நபர்களை நோக்கி அவர்களை இழுத்துச் செல்கின்றன, ஆனால் அவர்கள் ஏமாற்றங்களை சந்தித்தாலும், உண்மையான காதல் மீது ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் மாற்றம் மற்றும் தகவமைப்புக்கு குணத்திற்கு பெயர் பெற்றிருந்தாலும், அவர்கள் காதலில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளனர். அவர்கள் காதலிக்கும்போது, அவர்கள் தேர்ந்தெடுத்த நபர் சரியானவராக இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் துணைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் உறவை மேம்படுத்தவும், உறவில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள். காதல் மீதான அவர்களின் ஆசை சில சமயங்களில் அவர்களை நிராகரிக்கப்படும் அல்லது ஏமாற்றப்பட்ட சூழ்நிலைகளுக்கு அவர்களைத் தள்ளுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள்அதிக உணர்ச்சிவசக் கூடியவர்கள் மற்றும் உணர்திறன் கொண்டவர்கள். காதல் என்று வரும்போது, அவர்கள் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் மற்றும் அடிக்கடி காதலில் விழுவார்கள்.
அவர்களின் காதல் இயல்பு, அவர்கள் பலமுறை காதலில் ஏமாற்றமடைந்திருந்தாலும், ஒவ்வொரு புதிய நபரும் அவர்கள் தேடும் சரியான நபராக இருப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொள்ள நிறைய காதலை தங்கள் இதயத்தில் கொண்டுள்ளனர், எனவே எத்தனை முறை இதயம் உடைந்தாலும் அவர்கள் மீண்டும் காதலிக்க தயாராக இருக்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிர ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொரு முறை காதலிக்கும் போதும், அவர்கள் அதில் உறுதியுடன் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை காதலிக்க முடிவு செய்தவுடன், அவர்கள் மீது வெறித்தனமான காதலுடன் இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் தங்கள் துணையின் விருப்பம் பற்றியோ அல்லது சுதந்திரம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.
அதனால்தான் அவர்களின் துணை அவர்களை விட்டு மிக விரைவில் விலகிச் செல்கிறார்கள். அவர்களின் தீவிர காதல் பெரும்பாலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. ஆயினும்கூட, அவர்கள் எத்தனை முறை ஏமாற்றமடைந்தாலும், காதல் மீதான அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் குறையாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக பகுத்தறிவாளர்கள் மற்றும் ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்கள், வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களில் அவர்கள் தெளிவான முடிவெடுப்பவர்கள். இருப்பினும், காதல் என்று வரும்போது, அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் காதலில் விழும்போது, சரியான நபரைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க எதையும் செய்வார்கள் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இருப்பினும், அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளை அலட்சியம் செய்கிறார்கள். அவர்கள் காதலில் கண்மூடித்தனமாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியாததால் அவர்களின் துணையிடம் எளிதில் அவர்கள் ஏமாந்து விடுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
