Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
இந்த 4 ராசிக்காரங்க தங்கம் அணியக்கூடாதாம்.. இல்ல அது கஷ்டத்தை தருமாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Which Zodiac Sign Should Not Wear Gold: உலோகங்களில் தங்கம் விலையுயர்ந்தது மட்டுமின்றி, செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. இந்த தங்கத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆபரணங்கள் கண்களைப் பறிக்கும் அளவில் அழகாக இருப்பதோடு, அது அணிபவரின் அழகையும் அதிகரித்துக் காட்டும்.
பெண்களுக்கு இந்த தங்க ஆபரணங்களின் மீது ஆசை அதிகம் இருக்கும். ஆனால் தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தங்கம் ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுடனும் தொடர்புடையது. குறிப்பாக குருவுடன் தொடர்புடையது. இப்படிப்பட்ட தங்கம் ஆற்றல் மற்றும் வெப்பம் இரண்டையும் உற்பத்தி செய்வதோடு, விஷத்தின் விளைவையும் அழிக்கிறது.

ஜோதிடத்தில் கிரக தோஷங்கள், அதிர்ஷ்ட வளர்ச்சி மற்றும் நோய்களிலிருந்து நிவாரணம் பெற பல ரத்தினங்கள் மற்றும் உலோகங்களை அணியும் முறைகள் கூறப்பட்டுள்ளன. இதில் தங்கமும் அடங்கும். என்ன தான் தங்கம் செல்வத்தைக் குறித்தாலும், இந்த தங்கம் ஒருவரது விதியையும் தீர்மானிப்பதாக கூறப்படுகிறது. தங்கத்தை அணிய சில விதிகள் உள்ளன. அந்த விதிகளை பின்பற்றாவிட்டால், அதன் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஜோதிடத்தின் படி, தங்கம் அணிவது ஜாதகத்தில் உள்ள குருவை பலப்படுத்தும் மற்றும் வாழ்க்கையில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தரும். ஆனால் அனைவருமே இந்த தங்கத்தை அணியக்கூடாது. சில ராசிக்காரர்கள் தங்கத்தை அணிவதால் அதிர்ஷ்டத்தைத் தரும். ஆனால் சிலர் தங்கத்தை அணியும் போது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது எந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணியக்கூடாது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசிக்காரர்கள் தங்க நகைகளை அணிவது நல்லதல்ல. ஒருவேளை இந்த ராசிக்காரர்கள் தங்க நகைகளை அதிகமாக அணிந்தால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். அதோடு, ஒவ்வொரு வேலையிலும் தோல்விகளை சந்திக்க நேரிடும். பல இழப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக அன்புக்குரியவர்களுடனான உறவில் விரிசலை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் தவறுதலாகக் கூட தங்கம் அணியக்கூடாது. இவர்கள் தங்க ஆபரணங்களை அணிந்தால், அது தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தும். அதோடு இவர்கள் தங்கம் அணிந்தால் பண இழப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசிக்காரர்களும் தங்க ஆபரணங்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தங்கம் செவ்வாய்க்கும், சூரியனுக்கும் எதிரி. எனவே இந்த ராசிக்காரர்கள் தங்க நகைகளை அதிகம் அணிந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் விளைவாக வாழ்க்கையே மோசமாகிவிடும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த கும்ப ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்களை அணிவது நல்லதல்ல. இந்த ராசியின் அதிபதியான சரி, சூரியனுடன் தொடர்புடைய தங்கத்தை அணிந்தால், தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதோடு வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆம், ஒருவரின் ஜாதகத்துடன் ஒத்துப்போனால், தங்க நகைகள் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை அதிர்வுகளையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
தங்கம், குறிப்பாக செல்வம் மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடைய கோள்களின் நேர்மறை ஆற்றல்களை அதிகரிப்பதன் மூலம் ஒருவரின் ஜாதகத்தை பாதிக்கலாம்.
ஜோதிடத்தில் தங்கம் பெரும்பாலும் செழிப்பு, செல்வம் மற்றும் வெற்றியுடன் தொடர்புடையது. மேலும் இது சூரியனையும் அதன் நேர்மறை குணங்களையும் குறிக்கிறது.



Click it and Unblock the Notifications