Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த 4 ராசி பெண்கள் பிறவியிலேயே வலிமையானவர்களாம்... பயம்னா இவர்களுக்கு என்னனே தெரியாதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்காரரும் வாழ்வதற்கு அவர்களுக்கென வித்தியாசமான நடத்தையைக் கொண்டுள்ளனர். தைரியம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு அவசியமான நல்ல குணமாகும்.
தைரியம் எப்போதும் பாலினத்தைப் பொறுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட பெரிய தைரியசாலியாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் துணிந்து இறங்கும் தைரியம் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் யாருடைய அழுத்தத்திற்கும் பணிய மாட்டார்கள். அவர்கள் தங்கள் வேலையை வேறொருவர் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை. இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் தைரிய லட்சுமியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் பயமற்றவர்கள் இயற்கையாகவே தைரியசாலிகள். யாருடைய அழுத்தத்தின் கீழும் அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். அவர்கள் எந்தவொரு வேலையையும் சரியான நேரத்தில் முடிக்கக் கூடியவர்கள். எந்தவொரு பிரச்சனையும் அவர்களின் மனஉறுதியை உடைக்க முடியாது. மேஷ ராசி பெண்கள் தங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் வெற்றியைப் பெற விரும்புகிறார்கள்.
மேஷ ராசி பெண்கள் எல்லையில்லா ஆற்றல் கொண்டவர்கள். பாதகமான சூழ்நிலைகளிலும் பொறுமையை இழக்க மாட்டார்கள். அவர்களிடம் அதீத தைரியம் இருந்தாலும், அவர்களிடமும் சில குறைபாடுகள் உள்ளன, அவர்கள் மற்றவர்களை விரைவாக நம்புகிறார்கள், அதன் காரணமாக அவர்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடகம்
கடக ராசி பெண்கள் தங்கள் முடிவிலும், நம்பிக்கையிலும் உறுதியாக உள்ளனர். எவ்வளவு தடங்கல்கள் மற்றும் சவால்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் இலக்கை அடையாமல் விடமாட்டார்கள். அவர்களின் தைரியம் அவர்களுடனேயே பிறந்தது. அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. தங்கள் தைரியத்தை அவர்கள் ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டார்கள், சமயம் வரும்போது தங்கள் பயமின்மையை வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும், குழுவாக எப்படி முன்னேற வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள்.
மகரம்
மகர ராசி பெண்கள் எந்த துறையிலும் பயமின்றி பணிபுரியக் கூடியவர்கள். அதே சமயம், எந்த சூழ்நிலையிலும் சவாலை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் நிற்கிறார்கள். இந்த ராசி பெண்களிடம் தலைமைப் பண்புகள் இயல்பாகவே இருப்பதால், சோம்பேறிகளை அவர்களுக்குப் பிடிக்காது, சோம்பேறிகளுக்கு அவர்களைப் பிடிக்கவே பிடிக்காது.
மகர ராசி பெண்கள் கடின உழைப்பாளிகள். இந்த ராசியின் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். சனிபகவானின் செல்வாக்கு காரணமாக, இந்த ராசி பெண்கள் தங்கள் இலக்குகளில் மிகவும் தீவிரமானவர்களாக இருக்கிறார்கள். சரியானதைச் சொல்ல அவர்கள் சிறிதும் பயப்படுவதில்லை.
மீனம்
மீன ராசி பெண்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். அவர்கள் குறைவிலா அறிவை வரமாகப் பெற்றவர்கள். மீன ராசி பெண்கள் தங்கள் புத்திக்கூர்மையால் மிகப்பெரிய நெருக்கடியைக் கூட சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்கள், இதன் காரணமாக, அவர்கள் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் தைரியமானவர்கள். தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

