Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
உங்க ராசி என்னனு சொல்லுங்க...நீங்க எப்படிப்பட்ட மனைவியா இருப்பீங்கனு சொல்றோம்..இந்த 6 ராசி பெண்கள்தான் பெஸ்ட்!
ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் அவர்களின் ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. எதிர்காலம் என்று வரும்போது அதில் திருமணம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒருவரின் திருமண உறவை திருமண உறவை நிர்ணயிப்பதில் அவர்களின் வாழ்க்கைத்துணையே முக்கியப்பங்கு வகிக்கிறார்கள்.
அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும் அதிர்ஷ்டம் இல்லை. சிலருக்கு அவர்களின் மனைவி வரமாக இருப்பார்கள், அதேசமயம் சிலருக்கு அவர்களின் மனைவியே சாபமாக மாறுவார்கள். ஒருவர் எப்படிப்பட்ட மனைவி என்பதை நிர்ணயிப்பதில் அவர்களின் ராசி முக்கியப்பங்கு வகிக்கலாம். இந்த பதிவில் பெண்களின் ராசி அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்ட மனைவியாகி இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
வலிமையான ஆளுமை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவை மேஷ ராசி பெண்களை சிறந்த மனைவிகளாக மாற்றுகிறது. இயல்பிலேயே தலைவர்களாகப் பிறந்த மேஷ ராசிப் பெண்கள் தங்கள் கணவரை வலிமையாகவும், பொறுப்பாகவும் மாற்றும் திறன் கொண்டவர்கள். அவர்கள் சற்று பிடிவாத குணம் கொண்டவர்களாக இருந்தாலும், இந்த ராசி பெண்கள் உண்மையில் பணிவாக இருப்பதோடு, தங்கள் கணவரிடம் இருந்து யதார்த்தமான எதிர்பார்ப்புகளையும் கொண்டவர்கள்.
மேஷ ராசி பெண்கள் மிகவும் ஆதரவான மனைவிகளாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களது கணவரிடமிருந்தும் அதே ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். மேஷ ராசி மனைவிகள் சலிப்பான வாழ்க்கையை வாழ முடியாது மற்றும் திருமணத்தில் சாகசத்தை எதிர்பார்க்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் வீட்டை அழகாகவும், வசதியாகவும் மாற்றக்கூடியவர்கள். இயல்பிலேயே மிகவும் விசுவாசமான, ரிஷப ராசி பெண்கள் மிகவும் நம்பகமானவர்கள். அவர்கள் பெரும்பாலும் திட்டமிட்டு செலவு செய்யக்கூடியவர்கள், எனவே அவர்கள் தங்கள் சொந்த வருமான ஆதாரத்தை வைத்திருக்க விரும்புகிறார்கள் மற்றும் தங்கள் கணவரை சார்ந்திருக்க விரும்புவதில்லை. அவர்கள் எதைச் செய்தாலும், அதை முழு மனதுடன் செய்கிறார்கள்.
ரிஷப ராசிப் பெண்களின் சிறந்த குணம் என்னவென்றால், அவர்கள் சிறிய விஷயங்களிலேயே மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆடம்பர மற்றும் பொருள் சார்ந்த மகிழ்ச்சிக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் பிடிவாத குணம் உறவில் அவ்வப்போது சிக்கல்களை ஏற்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமையும், கம்பீரமும் கொண்டவர்கள். மிதுன ராசி பெண்கள் தடுக்க முடியாத மற்றும் ஒரு உணர்ச்சிமிக்க மனைவியாக இருப்பார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களிலும் எளிதில் சலிப்படைந்து விடுவார்கள், அதற்கு திருமண வாழ்க்கையும் விதிவிலக்கல்ல. எனவே அவர்களின் கணவரும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர்களாகவும், ஒரே மாதிரியான ஆர்வங்களைப் பகிர்ந்து கொண்டவர்களாகவும் இருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
அவர்கள் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதால் அவர்களின் கணவர்கள் அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாவார்கள். மிதுன ராசி மனைவியை கவர அவர்களுடன் நீண்ட நேரம் பேச வேண்டும் மற்றும் அவர்களின் நிலையற்ற மனநிலையை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
கடகம்
கடக ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். கடக ராசி பெண்ணை வாழ்க்கை துணையாக கொண்ட ஆண்கள் இணக்கமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வை அனுபவிப்பார்கள். கடக ராசியின் மனைவிகள் பக்தி கொண்டவர்கள் மற்றும் தங்கள் கணவர்களை நிபந்தனையின்றி நேசிப்பார்கள்.
தங்கள் கணவரின் தேவை என்ன, அதை எவ்வாறு வழங்குவது என்பதை அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். இயல்பிலேயே மிகவும் அன்பான அவர்கள், எப்போதும் தங்கள் துணையின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதேசமயம் அவர்கள் அதிக பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் ஆண்களை ஆட்டிப்படைப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆற்றல், சிற்றின்பம் மற்றும் உணர்ச்சிகளின் உருவமாக இருக்கிறார்கள். அவர்களின் ஆணைகளுக்கு ஏற்ப செயல்பட்டால் உங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், இல்லையெனில் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி பெண்கள் பாராட்டுக்களால் பொழியப்படுவதை விரும்புகிறார்கள், மேலும் தங்களை அனைத்து விஷ்யத்திலும் சரியானவர்களாக நினைப்பார்கள். அவர்களின் ஆதிக்க உணர்வு திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கும்.
கன்னி
அனைத்து விஷயங்களிலும் பர்பெக்ட்டாக இருப்பதால், கன்னி ராசி மனைவிகள் தங்கள் கணவர் அனைத்து விஷயத்திலும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கன்னி ராசி பெண்கள் எதார்த்தம் மற்றும் உணர்ச்சிகளின் சரியான சமநிலையை பராமரிக்கிறார்கள். அவர்கள் அனைத்து சூழ்நிலைகளையும் தனியாக கையாளும் திறன் கொண்டவர்கள்.
குடும்பத்தை சீராக நடத்த என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். கன்னி ராசி பெண்கள் பெண்கள் நம்பிக்கை, நேர்மறை ஆற்றல், நகைச்சுவை இயல்பு மற்றும் மிகவும் கனிவான இயல்பு கொண்வர்கள். ஒரு மனைவியாக அவர்கள் உண்மையிலேயே நம்பகமானவர்கள் மற்றும் அன்பானவர்களாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசி பெண்கள் காதலில் தீவிர நம்பிக்கைக் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் கணவரிடமிருந்து ஒரு இதயப்பூர்வமான அர்ப்பணிப்பை நாடுகின்றனர். தங்கள் கணவர் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கும் வரை அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாத. பொதுவாக அவர்கள் வேடிக்கையானவர்கள் மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிக்க விரும்புகிறார்கள்.
துலாம் ராசி பெண்கள் தங்கள் கணவர்களுடன் பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்ய விரும்பும் வேடிக்கையான மனைவியாக இருப்பார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையை வசீகரம், காதல் மற்றும் நல்லிணக்கத்தால் நிரப்புகிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க ஆண்களுக்கு அதிக திறமையும், பொறுமையும் தேவை. விருச்சிக ராசி பெண்கள் அனைத்து விஷயத்திலும் உயர்ந்த ரசனையைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் கணவரிடமும் அதையே எதிர்பார்க்கின்றனர். அவர்களுடன் இருக்கும் நேரம் ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாது.
விருச்சிக ராசி பெண்கள் வெளித்தோற்றத்திற்கு மிகவும் கடினமாகத் தோன்றுகிறார்கள், ஆனால் மனதளவில் மிகவும் மென்மையானவர்கள் மற்றும் எப்போதும் உணர்ச்சி பாதுகாப்பை நாடுகிறார்கள். அது கிடைக்கவில்லை என்றால் அது அவர்கள் உறவில் பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் கணவரை விட நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே ஆண்கள் கணவராக இருப்பதை விட நண்பராக திறந்த மனதுடன் இருப்பது நல்லது. தனுசு ராசி பெண்கள் சுதந்திர ஆன்மாக்கள், அவர்கள் கூண்டில் அடைக்கப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் மற்றும் எப்போதும் உறவை சுவாரஸ்யமாக வைத்திருக்க வேண்டும் என்ற நிலையான உந்துதலைக் கொண்டுள்ளனர்.
ஒரு மனைவியாக அவர்கள் மிகவும் ஆதரவாகவும், நட்பாகவும், தாராளமாகவும் இருக்கிறார்கள். தனுசு ராசி பெண்கள் மனைவியாக கிடைத்த ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் ஒரேயொரு நிபந்தனை அவர்களின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.
மகரம்
மகர ராசி மனைவிகள் கடினமான காலங்களில் கூட அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். அவர்கள் சிறந்த இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள் மற்றும் படுக்கையறையில் சிறப்பாக செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
மகர ராசி பெண் தங்கள் கணவரை சமூகத்தில் சிறந்த மனிதனாக மாற்றுகிறார்கள். பல துறையில் நிபுணர்கள், கடின உழைப்பாளிகள், ஆற்றல் மிக்கவர்கள், சுதந்திரமான மற்றும் வேடிக்கையானவர்கள் என மகர ராசி பெண்கள் பல விஷயங்களில் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களின் சோம்பேறித்தனம் அவர்களின் திருமண வாழ்க்கையில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
கும்பம்
கும்ப ராசி பெண்கள் மனைவிகள் என்பதை விட சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் கணவரின் மகிழ்ச்சியில் உண்மையான அக்கறை காட்டுகிறார்கள். கும்ப ராசி பெண்கள் தங்கள் கணவரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகிறார்கள், ஆனால் அதற்கு அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு விஷயம்தான், தங்கள் கணவர் நன்றியுடன் இருக்க வேண்டும்.
இந்த ராசி பெண்கள் புத்திசாலிகள், இனிமையானவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் சாகசத்தை விரும்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அதிக மனக்கிளர்ச்சியுடன் இருக்கலாம்.
மீனம்
ரொமான்ஸில் சிறந்த விளங்கும் மீன ராசி பெண்கள், எந்த சூழ்நிலையிலும் விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு ஓர் சிறந்த மனைவியை உருவாக்குகிறாரகள். மீன ராசி மனைவிகள் மிகவும் விசுவாசமானவர்கள், நம்பகமானவர்கள் மற்றும் புத்திசாலிகள். 'மூளையுடன் கூடிய அழகு' என்பது அவர்களைச் சிறப்பாக விவரிக்கிறது.
அவர்கள் அதிக கூச்சசுபாவம் உள்ளவர்கள், அதேசமயம் மிகவும் இனிமையானவை. அவர்களின் கோபமும், மனநிலை ஊசலாட்டமும் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கலாம் ஆனால் அவை எளிதில் கடந்து விடக்கூடிய சாதாரண சிக்கல்கள்தான்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












