Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஹோரை என்றால் என்ன? எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம் செய்யக்கூடாது?
simple ways to know about horai: ஜோதிடத்தில் பலவிதமான முறைகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஒரு கணக்கை நமது முன்னோர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அதன்படி நாம் பார்க்கும்போது நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு , சுக்கிரன் , சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது 1 மணி நேரமாகும். இந்த சொல்லில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாக சொல்வதுண்டு. இது குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் மூலமாக பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நமக்கு விளக்குகிறார் வாங்க தெரிந்துக் கொள்ளலாம்..

ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமையுனுடைய அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமையை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.
பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.
எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?
சூரிய ஹோரை :
சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள். அரசு அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி சூரியன். சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சித்தால் சிறக்கும். மேலதிகாரிகளை சந்தித்தல், அரசு சார்ந்த முயற்சிகள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காணுதல் போன்ற காரியம் செய்யலாம். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம். இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.
சுக்கிர ஹோரை:
களத்திரம், அழகு, கவர்ச்சி, சுத்தம் பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி. அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம். வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது. குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது.
புதன் ஹோரை:
கல்வி, கலைகள், நுண்ணறிவு, மாமா போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன். வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். புத்திகூர்மை வளர்வதற்கு இந்த ஹோரையில் முயற்சி மேற்கொண்டால் சிறப்பு.
சந்திர ஹோரை:
நவக்கிரகங்களில் மாதா காரகன், மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன். வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.
சனி ஹோரை :
நவக்கிரகங்களிலே ஆயுள் ,தொழில் , கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி. சனி ஹோரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.
குரு ஹோரை:
நவக்கிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தாணகாரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர். அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.
செவ்வாய் ஹோரை:
ரத்தம், மருத்துவம், பூமி, அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார். செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம்.
அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications