Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமா இருக்கும்..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 11 ஆகஸ்ட் 2024 முதல் 17 ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். வணிகத்தில் இருந்தால், இந்த வாரம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும் மற்றும் இந்த வாரத்தில் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் பணியிடத்தில் சில அற்புதங்களைக் காணலாம். வணிகத்தில் இருந்தால், அதிக லாபத்தைப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அதுவும் சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் சற்று பொறுமையாக இருந்து, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். வணிகர்களுக்கு இந்த வாரம் சவாலாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு இந்த வாரம் சவாலாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோல் ஒவ்வாமை, கடினமான சளி போன்றவற்றால் அவதிப்படலாம்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மீது ஆர்வமின்மையை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படலாம். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிகர்களும் கூட்டாளர்களிடமிருந்து பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அழற்சியால் அவதிப்படக்கூடும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியில்லாமல் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் திருப்தி இல்லாததால் வேலைகளை மாற்றுவது பற்றி நீங்கள் யோசிக்கலாம், இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். வணிகத்தில் இருந்தால், எளிதாக லாபம் சம்பாதிக்க முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் காரணமாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நன்றாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்தால், நல்ல அளவு லாபம் ஈட்ட முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் அருமையாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











