Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
Weekly Love Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
Weekly Love Horoscope: ஒருவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்துமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு நடக்கக்கூடியவை. அதிலும் திருமணம், காதல் என வரும் போது அதில் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பு தான்.
அந்த வகையில் இந்த வாரம் உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாராந்திர காதல் ராசிபலனை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். இந்த வாரம் ஜூலை 01 முதல் ஜூலை 07ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கம் காரணமாக, 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இந்த நேரத்தில் நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். அதுமட்டுமின்றி, அவர்களின் இதயத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். இருப்பினும், உங்களுக்கு இடையில் மூன்றாவது நபரின் குறுக்கீடு காரணமாக அது தடைப்படலாம். நீங்கள் பிறர் சொல்வதைக் கவனிக்காமல், உங்கள் முடிவுகளை நீங்களே சொந்தமாக எடுத்தால் நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இந்த காலக்கட்டத்தில் நீங்கள் பரபரப்பாக இருந்தாலும், உங்கள் துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவீர்கள். உங்கள் உறவில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேலும், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை தொடர பல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் உறவை மேம்படுத்த நீங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். உங்களின் கோப குணம் உங்களுக்கிடையே உள்ள தூரத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும், நீங்கள் உங்கள் ஈகோவை கைவிட வேண்டும். உங்களுக்கிடையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவர்கள் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க முயற்சி செய்யவும். நீங்கள் காதல் செய்கிறீர்கள் என்றால், உங்கள் உறவு தொடர்பான விஷயங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு தெரிய வரலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் அதிக அன்பைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் துணையுடன் முடிந்தவரை அதிக நேரத்தைச் செலவிட விரும்புவீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் எங்காவது வெளியே செல்லலாம். அதே நேரத்தில், காதல் ஜோடிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கிடையே உள்ள தூரம் குறைய வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் உறவில் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். உங்கள் மனதில் ஏதேனும் சங்கடம் இருந்தால், அதை உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பகிருங்கள். அமைதியாக இருந்து உங்களிடையே தவறான புரிதலை அதிகரிக்காதீர்கள். உங்கள் துணையைப் புரிந்து கொள்ள, அவருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் யாரையாவது விரும்பினால், இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு முன்மொழியலாம். நீங்கள் நேர்மறையான பதிலையும் பெறலாம். புதிய உறவைத் தொடங்க இது சிறந்த நேரம். நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். நீங்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கத் தொடங்குவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் சில பதற்றங்கள் இருக்கும். ஆனால், உங்கள் விவேகத்தால் விஷயத்தைத் தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் துணையின் நம்பிக்கையை மீண்டும் வெல்வீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு ஏதேனும் தகராறு இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதை சரிசெய்ய முயற்சி எடுக்கலாம். உங்கள் துணைள அனைத்து மனக்கசப்புகளையும் மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சி செய்யலாம். உங்கள் காதலை திருமணமாக மாற்ற விரும்பினால், இந்த காலக்கட்டத்தில் அவசரப்பட வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் துணை உங்களிடமிருந்து எதையாவது மறைக்க முயற்சிக்கலாம். அதுவே உங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக இருக்கும். உங்கள் பக்கத்தை திறந்த மனதுடன் முன்வைக்க முயற்சிப்பதுடன் உங்கள் துணையின் மனதையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எங்காவது வெளியே செல்லவும் நீங்கள் திட்டமிடலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் துணை உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார். இந்த நேரத்தில் நீங்கள் அவர்களை மீண்டும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் துணையிடம் முன்மொழிய இது சாதகமான நேரம். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்கும். அவர்களுடன் சில புதிய வேலைகளையும் தொடங்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











