Latest Updates
-
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம் -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெற்று ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வார ராசிபலன் (31 May 2026-06 June 2026)- ஜூன் மாதத்தின் முதல் வாரம் இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மே 24 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 06 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகரமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பயணங்களை மேற்கொள்ள நேரிடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் மங்களகரமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் குறிப்பிடத்தக்க ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய உறவுகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். தொழிலில் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்ய இந்த வாரம் உகந்ததாக இருக்கும். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் நிதி நிலைமை பாதிக்கப்படும். எந்த முதலீடுகளை செய்யும் முன்பும் சிந்திக்க வேண்டும். சண்டைகளை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் சவால்களை சந்திக்க நேரிடும். வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து பிரச்சனைகள் ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். முதலீடுகளால் நல்ல பலன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மொத்தத்தில் இந்த வாரத்தில் ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் மாற்றங்களை காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் சிவ சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளும், தேவையற்ற கவலைகளும் அதிகரிக்கும். இருந்தாலும், இந்த வாரம் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், தொழிலதிபர்களுக்கு தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்களை ஏமாற்ற பல முயற்சிக்கலாம். வேலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வருமானம் சீராக இருக்கும். தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். பண விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



