வார ராசிபலன் (27 October 2024-02 November 2024)- இந்த வாரம் இந்த ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 02 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 27 October 2024 To 02 November 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முயற்சித்தால் வெற்றி பெறலாம். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிகமாக செலவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் வருத்தப்பட வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்போது பொறுமையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் சில ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, வேடிக்கையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வார இறுதியில் குறுகிய தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தீரும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். உங்களின் வேலை பாதியிலேயே நின்றிருந்தால், அதை இந்த வாரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்தக் காலகட்டத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளளை சந்திக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் நிறைந்திருப்பீர்கள். வேலைகளில் முழு கவனத்தை செலுத்தி வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாரத்தின் இரண்டாம் பாதியில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும் மற்றும் உங்கள் நிதி நிலை வலுவடையும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் பணி தடையின்றி நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களின் கனவு நனவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவுகள் மேம்படும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு பிஸியாக இருக்கும். அதே சமயம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும், ஆனால் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் காதல் உறவு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வார இறுதியில் உங்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் சற்று சவாலாக இருக்கும். வீட்டு அல்லது பணியிடத்தில், பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக உங்கள் உடல்நிலை மோசமடையலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே செலவு செய்வீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வார இறுதியில் திடீர் வேலை சம்பந்தமான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான கவலைகள் இருக்கும். அதிகம் கவலைப்படுவதால் எதுவும் அடைய முடியாது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்க வேண்டும். நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். வருமானத்தை விட செலவுகள் கூடும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் எதிர்கால திட்டங்கள் தடைபடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் போவதால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சற்று மெதுவாக இருக்கும். ஆனால் போக போக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். நிதி நிலை மேம்படும். பணப்பற்றாக்குறையால் முடங்கிய வேலைகள் முடிவடையும். இருப்பினும் கடன் வாங்குவதை அல்லது கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலை தேடிக்கொண்டிருந்தால் உங்களுக்கு விருப்பமான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஏற்கனவே பணிபுரிந்தால், நீங்கள் பதவி உயர்வு பெறலாம். இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். இந்த வாரத்தில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வீட்டின் சூழ்நிலை மேம்படும். சொத்து சம்பந்தமான ஏதேனும் பிரச்னை நடந்து கொண்டிருந்தால், இந்த வாரத்தில் அந்த பிரச்சனை முடிவுக்கு வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆடம்பரத்திற்காக பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். பணியிடத்தில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கும். இருந்தபோதிலும் நீங்கள் முன்னேறி வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு சில வேலைகளைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, October 27, 2024, 6:30 [IST]
Desktop Bottom Promotion