Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
வார ராசிபலன் (22 December - 28 December 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பண பிரச்சனையை அதிகமா சந்திப்பாங்க!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 28 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கக்கூடாது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்ப சூழல் சாதாரணமாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த வாரமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிக வேலை காரணமாக மன அழுத்தத்தை சந்திக்கலாம். கடினமாக உழைப்பீர்கள். உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள். காதலில் உள்ள பிரச்சனைகளை பேசுவதன் மூலம் தீர்க்க முடியும். இந்த வாரத்தில் அதிக செலவு காரணமாக நிதி நிலையில் சரிவை சந்திப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பீர்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல், உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குங்கள். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல திட்டமிட்டால், உங்கள் துணையுடனான உறவு வலுவடையும். நிதி நிலை இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கடின உழைப்பு உங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியும். உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த வாரத்தில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் அந்த பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் எந்த புதிய திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டை புதுப்பிக்க பணத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் தொழில் மற்றும் தனிப்பட்ட விஷயங்களை சற்று அமைதியான மனதுடன் கையாள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மூன்றாம் நபரால் தம்பதிகளிடையே விரிசல் ஏற்படலாம். இதைத் தவிர்க்க வேண்டுமானால், தம்பதிகள் எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். புத்திசாலித்தனத்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். நேர்மறையான நடத்தை பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். திருமணமாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். நிதி நிலை வலுபெற வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் சற்று சோகமாக உணரலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையை கேட்டால், உங்கள் மன உறுதி அதிகரிக்கும். இந்த வாரத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் சட்ட பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். காதல் தோல்வியால் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதனால் நல்ல வெற்றியையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த வாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். தந்தையின் ஆதரவால் வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வீட்டில் சுப காரியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால் நிதி நிலையில் மாற்றங்களைக் காணக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications