Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
வார ராசிபலன் (19 October 2025-25 October 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 2025 அக்டோபர் 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்து இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் பேச்சில் நிதானம் அவசியம். வார இறுதியில் பயணங்களின் மூலம் மன அமைதியைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் மனநிறைவாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வார இறுதியில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் எந்த முடிவுகளையும் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும். பணியிட சூழலில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உடன் வேலை செய்வோர் அல்லது நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நிதி நிலைமை சீராக இருக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் அவர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டைப் பெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். உங்களின் படைப்பாற்றல் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்துக்கள் மற்றவர்களால் மதிக்கப்படும். நிதி நிலைமை வலுவடையும். அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இந்த வார இறுதியில் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் பொறுமை சோதிக்கப்படும். சில முக்கியமான பணிகள் விரைவில் முடிவடையாமல் தாமதமாகலாம். முதலீடுகளை செய்யும் முன் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இந்த வாரத்தில் மிகுந்த சோர்வை உணர்வீர்கள். உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் படைப்பாற்றல் நிறைந்ததாக இருக்கும். உங்களின் வேலையில் ஒரு புதிய நம்பிக்கை கிடைக்கும். உங்களின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். ஊடகம், கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். வார இறுதியில் உங்களுக்காக நேரத்தை செலவிட முயற்சித்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் சோதனை நிறைந்ததாக இருக்கும். உங்களின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய வாரமாக இருக்கும். பணியிடத்தில் அழுத்தத்தை உணரக்கூடும். இருப்பினும் மன உறுதியுடன் எதையும் திறம்பட கையாள்வீர்கள். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வார இறுதியில் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சிலர் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் சாதனைகளைப் புரிவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுடன் நல்ல தொடர்பைக் கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு ஒருவிதத்தில் நல்ல பலன்களைத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நண்பர்கள் அல்லது உடன் வேலை செய்வோருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் சிறப்பாக இருப்பதோடு, மகிழ்ச்சியையும் தருமை. உறவினர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் ஒருவித திருப்தியை உணர்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தன்னம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். பழைய வேலைகளை புதிய கண்ணோட்டத்துடன் அணுகி, சிறந்த முறையில் முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











