வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் 2026 செப்டம்பர் 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. மேலும் இந்த வாரத்தில் சூரியனின் நிலையிலும் மாற்றம் ஏற்படவுள்ளன.

Weekly Horoscope For 13 September 2026 To 19 September 2026 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் யாரிடமும் பழகும் போது மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் கோபத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சிக்கிய பணத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். திடீரென்று ஒரு பெரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் எந்தவொரு முயற்சியிலும் கவனக்குறைவாகவோ அல்லது அவசரமாகவோ செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். குடும்பப் பிரச்சினைகளும் இந்த வாரத்தில் உங்கள் வேலையைப் பாதிக்கும். இந்த வாரம் பணத்தை விவேகமாகச் செலவிட வேண்டும் மற்றும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் திடீர் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். வேலைக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று பரபரப்பாக இருக்கும். வியாபாரம் முன்னேறும். வாரத்தின் முதல் பாதியில் நீண்ட அல்லது குறுகிய தூர வணிகப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தப் பயணம் இனிமையானதாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். எதிரிகள் உங்கள் வேலையைத் தடுக்க முயற்சிக்கலாம். இருப்பினும் அனைத்து தடைகளையும் கடந்து விரும்பிய வெற்றியை அடைவீர்கள். காதல் துணையாக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, அவர்களுடன் தரமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பேச்சையும் நடத்தையையும் கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் உள்ள எதிரிகள் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் உதவியுடன் ஒவ்வொன்றையும் சமாளிப்பீர்கள். நண்பர்களின் உதவியுடன், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். முன்னேற்றத்திற்கான கதவுகள் உங்களுக்காகத் தானாகவே திறப்பதை காண்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முன்னேற்றமும் வளர்ச்சியும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும். முக்கியமாக இந்த வாரம் சில விஷயங்களுக்கு 'இல்லை' என்று சொல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காதது உங்களை வருத்தமடையச் செய்யலாம். உங்கள் உடல்நலம் மற்றும் உறவுகள் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரிகள் குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலையில் விரும்பிய முன்னேற்றத்தையும் லாபத்தையும் காண்பீர்கள். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான எந்தவொரு பெரிய முடிவுகளையும் எடுக்கும்போது உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். தொழில் மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உருவாகும். காதல் உறவுகள் சாதகமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அலுவலக வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தைரியம் அதிகமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் விரும்பிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தொடர்பான பயணங்கள் இனிமையாகவும் லாபகரமாகவும் இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தேர்வுகள் மற்றும் போட்டிகளில் விரும்பிய வெற்றியை அடைவார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். மேலும் உங்களின் பொறுமையையும், விவேகத்தையும் சோதிக்கும் வகையில் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காமல் போகலாம். வணிகர்கள் நிதிப் பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பழகும்போது பணிவாக இருங்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். ஆரோக்கி பிரச்சனைகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் மற்றும் விரும்பியபடி முடிவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு பணி நிறைவடைவதால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் மங்களகரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். உங்கள் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் பரபரப்பாகவும் செலவு மிகுந்ததாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு, முதலீடு செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல. பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை வலுவடையும். காதல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையலாம். திடீரென நிதி ஆதாயங்களைப் பெறலாம். வணிகர்களுக்கு விரும்பிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். உங்கள் குழந்தையின் சாதனைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, September 12, 2026, 23:21 [IST]
Desktop Bottom Promotion