Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
வார ராசிபலன் (09 November 2025 To 15 November 2025)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 நவம்பர் 09 ஆம் தேதி முதல் 2025 நவம்பர் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் புது ஆற்றல் நிறைந்து இருப்பீர்கள். வேலையில் உங்களின் முயற்சிகள் பாராட்டப்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இருப்பினும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பழைய சண்டைகள் தீர்க்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தவறான புரிதல்களால் சண்டைகள் வரலாம். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண உறவில் பொறுமை அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் படைப்பாற்றல் அனைவராலும் ஈர்க்கப்படும். வேலை அல்லது வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையை சமநிலையில் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப உறப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகுளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக சுமாராக இருக்கும். மனம் அமைதியாக இருக்க தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றியைக் குவிப்பீர்கள். கூட்டு தொழில் நல்ல லாபத்தைத் தரும். வேலையில் உங்களின் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும். நிதி நிலை வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதயம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். திட்டமிட்டு செய்யும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும் மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக இந்த வாரம் சாதகமாக இருக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால், மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மனதளவில் நேர்மறையாக இருப்பீர்கள். வார இறுதியில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல பலனைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இருப்பினும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சற்று சிரமமாக இருக்கும். ஆனால் பொறுமையால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் பொறுப்பு அதிகமாக இருக்கும். கடின உழைப்பும், திட்டமிடலும் வாழ்வில் வெற்றியைத் தரும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். உறவுகளில் புரிதலும், பொறுமையும் மோதல்களை தவிர்க்க உதவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். வார இறுதியில் ஒருவித மன திருப்தி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தகவல் தொடர்பு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய யோசனைகள் வாழ்க்கையை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்லும். நிதி நிலை சுமாராக இருக்கும். இந்த வாரம் எந்த செலவையும் யோசித்து செய்ய வேண்டும். அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளில் தெளிவும் நேர்மையும் தவறான புரிதலைத் தீர்க்க உதவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். வார இறுதியில் தனிப்பட்ட வளர்ச்சியைக் காண்பீர்கள் மற்றும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உணர்ச்சி ரீதியாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் பொறுமையுடன், திட்டமிடலும் இருந்தால் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நிலையானதாக இருக்கும். அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளில் உணர்ச்சி ரீதியான தொடர்பு வலுவாக இருக்கும். வார இறுதியில் குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











