Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 16 மார்ச் 2025 முதல் 22 மார்ச் 2025 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக அவ்வளவு சிறப்பாக இருக்காது. பல பிரச்சனைகளை வேலையில் சந்திக்க நேரிடும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்காது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாக நேரிடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் அவசரப்படாமல் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை கொண்டவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தனது முழு திறமையையும் வெளிக்காட்டிய பின்னரே வெற்றி பெறுவார்கள். இருப்பினும் வேலையை முழு கவனத்துடன் செய்ய வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை அவ்வளவு நன்றாக இருக்காது. எவ்வளவு முயற்சித்தாலும் வெற்றி கிடைக்காது. நீண்ட காலமாக அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால், பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால், நல்ல செய்தியை இந்த வாரத்தில் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விரும்பினால், இந்த வாரத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதன் மூலம் புதிய பொறுப்புக்களை பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பான வாரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக வேலையை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நல்ல வேலை தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களால் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். இதனால் பணியிடத்தில் சற்று மோசமாக உணரலாம். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும். இதனால் தேர்வுகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சலுகைகள் கிடைக்கும். ஆனால் சரியாக முடிவெடுக்க தெரியாததால், அந்த வாய்ப்புக்களை இழந்துவிடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் குறைவான முயற்சியிலேயே நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்வார்கள். இதனால் அலுவலகத்தில் நல்ல பலனைப் பெறக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த வாரத்தில் நல்ல வேலையைப் பெறலாம். ஆயிலும் கடினமாக உழைத்தால், அதற்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குறைவாக உழைத்தாலே நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
