Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Venus Transit In Thiruvonam Nakshatra 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
எனவே ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையானது மிகவும் முக்கியம். சுக்கிரன் சிறப்பான நிலையில் இருந்தால் தான் ராஜவாழ்க்கை வாழ முடியும். இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் திருவோண நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும்.

திருவோண நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் சில ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியையும், பண வரவையும் பெறவுள்ளார்கள். இப்போது திருவோணம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, பண மழை கொட்டப்போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய நிதி நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெற்றாலும் சிறிது அழுத்தத்தை உணரக்கூடும்.
பணிபுரிபவர்கள் புதிய வேலையை தேடலாம். வியாபாரிகள் போட்டியாளர்களுக்கு நல்ல போட்டியைக் கொடுப்பார்கள். சுக்கிரனின் அருளால் பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் வந்துவிடும்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களையும் தரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். தொழிலில் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல பலனை அளிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
