சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 25 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..

Venus Transit In Scorpio On October 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இதன் விளைவாகவே சில நாட்கள் சிலருக்கு அருமையாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் தான், அந்நபர் செழிப்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இதுவரை துலாம் ராசியில் பயணித்து வந்த சுக்கிரன் அக்டோபர் 13 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.

Venus Transit In Scorpio On October 2024 Effects On 12 Zodiac Signs In Tamil

இந்த விருச்சிக ராசியில் அடுத்த 25 நாட்கள் சுக்கிரன் பயணிப்பார். விருச்சிக ராசிக்குள் சுக்கிரன் நுழைந்ததால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது விருச்சிக ராசிக்கு சென்றுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சற்று கசப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சில செயல்படுவார்கள். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே பெரிய பிரச்சனையில் சிக்க வைத்துவிடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். யாருக்கும் அதிக பணம் கொடுக்க வேண்டாம். இல்லையெனில், அந்த பணம் கைக்கு திரும்ப கிடைக்காது.

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக ஏமாற்றமடையலாம். வெளிநாட்டில் குடியுரிமைக்காக முயற்சித்தால், இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். சண்டைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்ற விஷயங்களை வெளியில் பேசி தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலத்தில் பெற்றோரின் சம்மதம் பெற முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் அனைத்து வகையிலும் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். அரசு வேலைக்கு முயற்சித்தால் நல்ல செய்தியைப் பெறக்கூடும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் திறமையான திட்டங்கள் மற்றும் திறமையான உத்திகள் காரணமாக, மோசமான சூழ்நிலையை சிறப்பாக கையாள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட விடாதீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் கூடும். நிதி நிலை வலுவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் வாங்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சதியால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும். நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினைகளைத் தீர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றிகள் குவியும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், இக்காலம் சாதகமாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக பயணங்களால் நிறைய செலவுகளை சந்திப்பார்கள். இது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். ஆடம்பரப் பொருட்களுக்குச் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் இடது கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தால், நல்ல செய்தியைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனம் வாங்க விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வெற்றிகரமாக நடக்கும். பெரிய வேலையை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகளும் வெற்றி பெறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 14, 2024, 10:28 [IST]
Desktop Bottom Promotion