Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
50 ஆண்டுகளுக்கு பின் சனியின் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் முடியப்போகுது..
Venus Transit In Poosam Nakshatra On 23 August 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் அதன் நட்பு கிரகமான சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சுக்கிரன் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்திற்கு சுக்கிரன் 50 ஆண்டுகளுக்கு பின் நுழையவிருக்கிறார்.

இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக பணக்கஷ்டம் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அதுவும் வேலை செய்பவர்களுக்கு தங்களின் செயல்திறனை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தந்தையுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அவருடனான உறவு வலுவடையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். ஒவ்வொரு பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கடனால் சிரமப்பட்டு வந்தால், அந்த கடனை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இக்காலத்தில் பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். இதனால் எப்பேற்பட்ட பிரச்சனையையும் பேசி தீர்வு காண்பீர்கள். இந்த காலத்தில் உங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் கூட்டாளிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் பெரிய வணிக ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications