Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: மார்ச் மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க
Malavya Rajyog 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். மேலும் சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதோடு சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருக்கும் போது சுப யோகங்களை உருவாக்கி, கூடுதலாக சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் சுக்கிரன் மார்ச் மாதத்தில் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசி சுக்கிரனின் உச்ச ராசியாகும். இந்த மீன ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால், சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்துடன், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
வேத நாட்காட்டியின் படி, செல்வத்தின் காரணியான சுக்கிரன் மார்ச் 02 ஆம் தேதி நுழைந்து, மார்ச் 26 ஆம் தேதி வரை இருப்பார். அதோடு இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவான் உள்ளார். இதனால் சுக்கிரன் மற்று சனி ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இப்போது மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும்.
பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். பணியிடத்தில் இலக்குகளை அடைவார்கள். அன்புக்குரியவரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும்.
புதிய வருமானத்தை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சுக்கிரனின் அருளால் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
