Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: பிப்ரவரி 22 முதல் இந்த 5 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது...
Venus Transit In Poorattathi Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தை மாற்றுவார்.
அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் தற்போது சுக்கிரன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதி சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல உயர்வையும், தொழிலில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரி 22 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். சமூக வட்டம் விரிவடையும். நிதி நிலையில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பேச்சால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள் மற்றும் பல முக்கியமான வேலைகளையும் முடிப்பீர்கள். காதல் உறவுகள் வலுவடையும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் சமூகத்தில் உங்களின் நற்பெயரும் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். மேலும் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். படைப்புத் துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் செய்யும் புதிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். மன நிம்மதி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய திட்டங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நிதி தொடர்பான விஷங்களில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




