Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பிப்ரவரி மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிக்கட்டி பறக்கப்போறாங்க..
Sun Transit In Aquarius On 13 February 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார்.
சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் சூரியன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மாசி மாதம் பிறக்கப்போகிறது. இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானும், சூரியனும் மகன் தந்தையாக கருதப்பட்டாலும், பகை கிரகங்களாவர்.

இதனால் இந்த சூரிய பெயர்ச்சி சற்று சிறப்பானது. சனியின் ராசிக்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, புதிய வேலை மற்றும் வருமானத்தில் உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது. இப்போது கும்ப ராசிக்கு செல்லும் சூரியனால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும்.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். காதல் உறவு வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சூரியனின் ஆசியால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சூரியனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் மேம்படும். மேலும் உங்களின் முயற்சிகள் பாராட்டைப் பெறும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
நிதி நிலைமை வலுவடையும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications