Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்...
Venus Transit In Aquarius 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி தனது நிலையை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குரு மற்றும் அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் பிப்ரவரி 06 ஆம் தேதி சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகும். ஏனெனில் சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஒருவரது நிதி நிலை, காதல் வாழ்க்கை, அழகு போன்றவற்றில் அதன் தாக்கம் தெரியும்.

அதுவும் சுக்கிரன் கும்ப ராசிக்கு சென்றிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு வாழ்க்கையில் சிரமங்கள் அதிகமாக இருக்கலாம். இப்போது கும்பத்தில் இருக்கும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கன்னி
* கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார்.
* இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான சிரமங்களையும், சிக்கல்களையும் சந்திக்கலாம்.
* ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடலாம்.
* பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். இதனால் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.
* இக்காலத்தில் செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
* பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவால் சிரமப்பட நேரிடும்.
விருச்சிகம்
* விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார்.
* இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* வீட்டு செலவுகள் அதிகரிக்கும்.
* ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிப்பதால், மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
* மன அமைதி பாழாகும். வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
* விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
* கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார்.
* ஆகவே செலவுகள் கையை மீறிப்போகும். வேலையில் நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.
* ஆசைகள் அதிகரிக்கும். எனவே ஆடம்பர பொருட்களுக்கு நிறைய செலவுகளை செய்வீர்கள். இதனால் பண பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
* உறவுகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதன் விளைவாக விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications