Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
12 மாதங்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் குரு: மார்ச் முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Jupiter Direct In Gemini 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். ஒருவர் நல்ல செல்வ செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு இதற்கிடையே வக்ர நிலையிலும், வக்ர நிவர்த்தி அடைந்தும் பயணிப்பார். அந்த வகையில் தற்போது குரு பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். குரு பகவான் வக்ரமாக இருந்ததால், அவரால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் தடைகள் இருந்திருக்கலாம்.

ஆனால் மார்ச் மாதத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் குருவின் இந்த நிலை மாற்றத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது குரு வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் நல்ல நிதி ஆதாயங்களையும், சமூகத்தில் நல்ல நிலைக்கும் வருவீர்கள். நீண்ட காலமாக திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமாவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும். குருவின் ஆசியால் மார்ச் முதல் கஷ்டங்கள் தீர்ந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் அல்லது பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். முக்கியமாக குருவின் அருளால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு முயற்சிகளுக்கும் ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குரு பகவானின் அருளால் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கையும் பிரகாசிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications