Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Mrigashira Nakshatra On July 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சுக்கிரன் ஜூலை 20 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார். இந்த மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான சவால்களை எதிர்கொள்வார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய குழப்பங்களை சந்திக்க நேரிடும். உறவுகளில் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும். காதலர்களிடையே மனக்கசப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்கி அவதிப்பட நேரிடும். முக்கியமாக தேவையில்லாத செலவுகளால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளிடையே தவறான புரிதல்களால் பதட்டம் அதிகரிக்கும். சில சமயங்களில் உறவுகளில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த கோபத்தால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இதுவரை ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், இனிமேல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications